பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/517

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

516

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


வாசித்தார். "தமிழர்களுக்குக் கல்வி கொடுத்த பெருமையில் பங்குபெற வேறு யாருக்கும் உரிமை கிடையாது" என்று 20.7.69 உலக அறிவியலில் குறிப்பிடத்தக்க நாள். ஆம்ஸ்ட்ராங், அல்டிரின் இருவரும். நிலாவில் காலடி வைத்த நாள்! இந்திய அரசியலிலும்' குறிப்பிடத்தக்க நாள்: 14 பேங்குகள் தேச உடைமை ஆன நாள்!

தென்னார்க்காடு மாவட்ட திராவிடர் கழக மாநாடும், பகுத்தறிவாளர் மாநாடும் 26, 27 தேதிகளில் நடைபெற்றன. தி.சு. மாநாட்டின் தலைவர் நீடாமங்கலம் அ.ஆறுமுகம்: திறப்பாளர் திருவாரூர் தங்கராசு; கொடி உயர்த்தியோர் கி.வீரமணி; பகுத்தறிவாளர் மாநாட்டுத் தலைவர் பெரியார்; திறப்பாளர் ஃபாரூக். இந்த நாளில் சென்னையில் தி.மு.க. பொதுக் குழு கூடிப், பேச்சு வார்த்தைகள் மூலமே சுமுகமான முடிவுக்கு வந்து, தலைவராகக் கலைஞர், பொதுச் செயலாளராக நாவலர், பொருளாளராகப் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்., துணைப் பொதுச் செயலாளர்களாகக் காஞ்சி மணிமொழியார், கே. ராஜாராம் என்ற வகையில் போட்டியின்றி அறிவிக்கப்பட்டது கேட்டுப் பெரியார் நிம்மதியடைந்து “தலைவர் ஸ்தானம் 20 ஆண்டுகளாகக் காலியாயிருந்தது நிரப்பப்பட்டது" என்றார். 29ந் தேதி "விடுதலை" யில் ரசிக்கத்தக்க செய்தி ஒன்று:- குன்றக்குடி அடிகளார் பூசையில் அணியும் 7,000 ரூபாய் பெறுமான சாமான்கள் திருட்டுப் போயின. போலீசார், பழைய பணியாள் ஒருவனிடமிருந்து கைப்பற்றினர். இதில் கடவுள் கைகொடுக்கவில்லை என்று!

புதிய அமைச்சர்களாக நாவலர், என்.வி. நடராசன், கா.வேழ வேந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். என்.டி. சுந்தரவடிவேலு சென்னைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப் பட்டதைப் பாராட்டி "விடுதலை" 31.7.69 அன்று தலையங்கம் தீட்டியது. "நாடு பஞ்சம் வறட்சி என்று தவித்துக் கொண்டிருக்கையில், பார்ப்பான் பாரத ராமாயணம் படிப்பதை நிறுத்துகிறானோ? ஆட்சி மீது குறை சொல்லுவதை நிறுத்துகிறானோ? என் உயிர் உள்ளவரை தி.மு.க. ஆட்சியை ஒழிய விடமாட்டேன்!" என்று உறுதி தெரிவித்த பெரியார், நீதித்துறையில் யாரும் தொட்டுக் காட்டாத ஓர் அக்கிரமத்தைக் குறிப்பிட்டார். “ஜில்லா ஜட்ஜ்கள் 16 பேர்தான் இருக்கிறார்கள். அவர்கள் தீர்ப்பு மீது அப்பீலை விசாரிக்க, ஐகோர்ட்டில் ஏன் 18 நீதிபதிகள்?" என்ற கேள்விக்கு, என்ன பதில்? ஜட்ஜுகளை வக்கீலில் இருந்து நேரடியாக நியமிப்பதைப் பெரியார் இடைவிடாமல் எதிர்த்து வந்தார்.

ஆகஸ்டு மாதம், பெரியாருக்கு, இயல்புக்கு மாறான மாதமாகிவிட்டது. 30.7.69 சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மறுநாள் அறுவை சிகிச்சை நடந்தது. ஆகஸ்டு 2-ஆம் நாள் கலைஞர், நாவலர், ப.உ. சண்முகம், முரசொலி மாறன் ஆகியோர் சென்று கண்டு