பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/523

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

522

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


'சாதிக்கு' (வகுப்புக்கு) இயற்கை என்றாலும் இது வருந்தத் தக்கதேயாகும். எனது 90-வது வயதைவிட, 91-வது வயது திருப்தியையும், மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது என்பது என் கருத்து.

விபூஷணர்கள் திருந்துவார்களா!

தி.மு.க. ஆட்சி, இனியும் குறைந்தது 10 ஆண்டுகளுக்காவது இருக்கும்படி, மக்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். எனக்கு இதற்குமேல் கருத்தும் ஓடவில்லை ; எழுதவும் முடியவில்லை .

அக்டோபர் மாதத்தில் கோயில் கருவறை நுழைவுக் கிளர்ச்சி பற்றியே பெரியாரின் சிந்தனை ஓட்டம் மிகுத்துக் காணப்பெற்றது. "விடுதலை" முதல் பக்கம் பெரிய எழுத்தில் கட்டம் போட்ட செய்தி; சூத்திரன் என்கிற இழிவு நீக்கக் கிளர்ச்சி. காலம் வீணாய்ப் போய்ச் கொண்டிருக்கிறது. அய்ப்பசி மாத வாக்கில் சூத்திரன் என்கிற இழிவு நீக்கக் கிளர்ச்சி துவக்கப்படும். அதில் ஈடுபட இஷ்டமுள்ளவர்கள் ஈ.வெ.ரா.வுக்குத் தெரிவியுங்கள் - என்று! “விடுதலை" 9-ந் தேதி தலையங்கமே, காலம் வீணாய்ப் போய்க் கொண்டிருக்கிறது. என்பதுதான். பெரியார் அந்த வாரத்தில் எழுதினார்:- "வடநாட்டில் உள்ள காசி, பூரி, பண்டரிபுரம் முதலான ஊர்களின் பிரபலமான கோயில்களில், பக்தர்களே பூசை செய்யலாம். கர்ப்பக்கிரகத்தில் யாரும் போகலாம். இந்து மதம், ஆகமம் என்றெல்லாம் சொல்லிக் கொள்வது, இந்தத் தமிழ் நாட்டில்தான். இந்துக்கள் எல்லாருக்கும் பொதுவான இடமாகிய கோயிலில் பேதம் காட்டுவது ஏன்? சிலை இருக்கும் இடத்திற்குப் பார்ப்பான்தான் போகலாம். சிலைகளுக்குப் பார்ப்பான்தான் பூசை செய்யலாம். கடவுளுக்கு வடமொழியில்தான் மந்திரம் சொல்ல வேண்டும். ஆகவே இந்த இழிவுகளை ஒழிப்பதற்காக நாம் நடத்த இருக்கும் கர்ப்பக்கிரகப் பிரவேசக் கிளர்ச்சியில் ஈடுபடத் தயார் என்று கையெழுத்துப் போட்ட கடிதத்தை எனக்கு, திருச்சி - 17 என்ற முகவரிக்கு அனுப்புங்கள். கிளர்ச்சி துவக்கப்படும் இடம் சென்னை , திருச்சி, திருவரங்கம், தஞ்சாவூர் அல்லது மன்னார்குடி ஏதாவது ஓர் ஊராக இருக்கலாம். இதில் பார்ப்பனர் அல்லாத இந்துக்கள் எனப்படுவோர், எந்தக் கட்சிக்காரராயிருந்தாலும், எல்லாரும் கலந்து கொள்ள வேண்டும். இந்தக் கிளர்ச்சி அவசியமா, இல்லையா, என்று கொஞ்சம் யோசனை செய்து பாருங்கள். அவசியம் என்று தெரிந்தால் வாருங்கள்; போகலாம்! இந்தக் கிளர்ச்சியின் தத்துவம், நம்மேல் சுமத்தப்பட்டிருக்கும் தாழ்த்தப்பட்ட சாதி என்கிற இழிவை ஒழிப்பதுதான். ஈரோட்டில், முதன்முதலில் கோயில் பிரவேசம் செய்து காட்டியது நான்தான். நாம் இப்படிக் கோயிலுக்குள் செல்வதால், நம்மீது இரண்டு கிரிமினல் குற்றங்கள்தான் சுமத்தப்பட முடியும்! அதையும் பார்த்து விடலாம்"