பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/536

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

535


காலத்தைச் சுருக்க நேரிடும்" என்பதுதான் கருத்து. “பஞ்சேந்திரியங்களுக்கும் தட்டுப்படாத விஷயம், பொருள், நடப்பு ஆகிய எதுவானாலும் அது பொய் என்று சொல்வதுதான் பகுத்தறிவுவாதியின் கொள்கை" என விளக்கினார் பெரியார். "பழங்கால வைத்தியமுறை இப்போது எதற்காக? சித்த மருத்துவத்துக்குப் புத்துயிர் தரப்போகிறார்களாம். நவீன இரத்தப் பரிசோதளை போன்ற காரியங்களை இயந்திர மூலந்தானே செய்ய முடியும்! இதைப் பற்றிக் கவலையோடு சிந்திக்க வேண்டும்” என்றார் பெரியார்.

மத்திய சுகாதாரத்துறை 'ராஜாங்க அமைச்சர் டாக்டர் எஸ். சந்திரசேகருடன் பெரியார் பேட்டி, 14-ந் தேதி நடந்தது. இது அடுத்த மார்ச் 8-ந் தேதி சென்னை வானொலியில் ஒலிபரப்பாகியது, "விடுதலை" 9-ந் தேதி பிரசுரித்தது. இதனடிப்படையில் தானோ என்னவோ, பெரியார், அடுத்த முறையும் டாக்டர் சந்திரசேகரை ராஜ்யசபை உறுப்பினராக்க வேண்டுகோள் விடுத்தார். அது பின்னர் வெற்றி பெறவில்லை.

தோழர்கள் நிறையப் பேர் தம்மிடம் சிபாரிசுக்கு வந்து தொல்லை தருவதாகப் பெரியார் மிக எரிச்சலுற்றார். நாள்தோறும் தொந்தரவும், வீண் கெட்ட பெயரும் வருவதாக வருத்தத்துடன் எழுதியிருந்தார்.

10-2-70 அன்று, கலைஞர் ஆட்சிக்கு வந்த ஓராண்டு நிறைவு நாள், அண்ணாவின் இடத்தில் தானிருப்பது, மின்விளக்குக்குப் பதில் மெழுகுவத்தி போலிருந்தாலும், இயன்றவரை ஒளிதருவதாகக் குறிப்பிட்டார். இடிப்பாரையில்லா ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும் என்ற குறளை நினைவூட்டிப், பெரியார் போன்றவர்கள், தான் தவறு செய்தால் எடுத்துக்காட்ட வேண்டினார். 19-ந் தேதி திருச்சியில் தி.மு.க. மாநாடு எழுச்சியுடன் நடந்தது. சி.பி. சிற்றரசு தலைமையில் புரட்சி நடிகர் எம்.ஜி. ராமச்சந்திரன் துவக்கிவைத்தார். பஞ்சாப் முதல்வர் குர்ணாம்சிங், புதுவையில் தி.மு.க. முதல்வர் ஃபாரூக் ஆகியோர் பங்கேற்றனர். அண்ணா வழியில் அயராதுழைப்போம்; ஆதிக்கமற்ற சமுதாயம் அபைத்தே தீருவோம்; இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்; வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்; மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயஆட்சி என்ற அய்ந்து முழக்கங்களைக் கலைஞர் அங்கே தந்தார். தி.மு.க. வின் அரசியல் தீர்மானம் வரவேற்கப்படத்தக்கதே; மத்திய ஆளுங்கட்சிக்கு வரையறுத்த ஆதரவு தருவதாகக் கூறியது சரிதான் - என்று “விடுதலை” 21-ந் தேதித் தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தது. இந்தி கட்டாயமாக மத்திய அரசு ஊழியர்மீது திணிக்கப்படுவதை