பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/535

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

534

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


படுகிறது. தத்துவத்தைப் புரிந்து கொண்ட அரசுக்கு நன்றி. விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்."

பிற்படுத்தப்பட்டோர் நலக் கமிஷன் 22 மாலை 4-30 மணிக்குப் பெரியாரைத் திருச்சியில் சந்தித்தது. பெரியார் தமது நீண்ட நாளைய எண்ணங்களைத் தெரிவித்தார். ஆதித்திராவிடர்களுக்கு. அக்கிரகாரத்தினுள் சொந்த வீடு கட்டித் தந்து குடியிருக்கச் செய்ய வேண்டும். சட்ட சபையில் 25 சதவீத இடத்தைத் தேர்தல் மூலம் நிரப்பாமல், போட்டியிட்டு வரமுடியாத ஜாதிகளிலிருந்து, அரசே நாமினேஷன் செய்ய வேண்டும். யாரும், எந்தப் பதவியிலும், இரண்டு term-க்கு மேல் இருக்கக் கூடாது.

24-ந் தேதி கடவுள் என்ற தலையங்கத்தில் பெரியார் - “மதமும் கடவுளும் மனிதனை முட்டாளாக்கும் கருவிகள். கடவுள் மறைய மறைய மனிதனுக்கு அறிவு வளரும்; சுதந்திரம் அதிகமாகும். உண்மையான தி.மு.க. காரர்களுக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது என்பது எனக்குத் தெரியும். இன்னும் இது மாதிரி 2 லட்சம் தி.மு.க. உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டால், யாரும் ஆட்சியையோ, கழகத்தையோ அசைக்க முடியாது. நிலாக்கல் கொண்டு வரும் காலத்தில் கல்லுச்சாமியைக் கட்டிக்கொண்டு அழ வேண்டுமா?" என்று கேட்டார். இந்தி சகவருட முறையைத் தமிழக அரசு ஏற்கவில்லை என 31-ந் தேதியும், தமிழில் அர்ச்சனை தொடங்கப்பட்டது என 1-ந் தேதியும் அரசு தரப்பில் செய்திகள் வெளி வந்தன.

'நாத்திக உலகத்துக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு' எனப் பெரியாரால் வருந்தி மொழியப்பட்டவாறு, பிரிட்டிஷ் பேரறிஞர் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் 3-2-1970 அன்று 96-வது வயதில் காலமானார். பேரறிஞர் அண்ணா நினைவு நாளான அன்றைய தினம், சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில், மத்திய அமைச்சர் பேராசிரியர் ஷேர்சிங், அண்ணா நினைவுத் தபால் தலை வெளியிட்டார்.

35 லட்சம் ரூபாய்க்கு ஸ்டாம்புகள் வெளியிடப்பட்டதாக அவர் கூறினார். 6-ந் தேதி வித்தியாசமான ஒரு தலையங்கம் பெரியார் எழுத நேர்ந்தது. ஆனந்த விகடனின் ஜாதி புத்தி' என்பது தலைப்பு, என்ன கோபம்? - “வாசன் இருந்தவரை ஆனந்தவிகடன் பத்திரிகை சமுதாய சம்பந்தமான விஷயங்களில் நடுநிலை வகித்து வந்தது. இப்போது அது அசல் பார்ப்பன சாதி புத்திக்கு வெற்றிலை பாக்கு வாங்கும் நிலைக்கு வந்து விட்டது. அனைத்துச் சாதியும் அர்ச்சகராக வேண்டும். அல்லது கோயில் கருவறைக்குள் எவரும் செல்ல அனுமதிக்க வேண்டும் என்பதற்காக ஒரு கிளர்ச்சி நடத்த நாங்கள் முடிவெடுத்தோம். அரசாங்கம் உறுதி சொன்னதன் பேரில் கிளர்ச்சியை ஒத்திவைத்தோம். இனியும் அரசு தாமதப்படுத்தினால் நாங்கள் ஒத்திப் போட்ட