பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/534

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

533


கிறிஸ்தவர்கள் அமெரிக்காவிலிருந்தும் பணம் வரவழைத்தார்கள். பார்ப்பனர்கள் எதிர்ப்புப் பத்திரிகை ஆரம்பித்தும், காலிகளை ஏவியும் எதிர்ப்புக் காட்டினார்கள், "குடி அரசு" வாரப் பத்திரிகை, "விடுதலை” தினப் பத்திரிகையாக வளர்ந்தது; ஒழிந்துவிடவில்லை! "உண்மை சமுதாய இழிவு, மடமை ஒழிக்கும் தொண்டுக்காக என்றே பிறந்திருக்கிறது.

“உண்மை " நாத்திகப் பத்திரிகைதான். சாக்ரடீஸ் நாத்திகர், பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், பெர்னார்ட்ஷா நாத்திகர்கள்தான், இயேசு நாதரும் நாத்திகர் என்றே சொல்லப்பட்டுக் கொலையுண்டார். முகமது நபியும் நாத்திகர் என்றே சொல்லப்பட்டு அடித்து விரட்டப்பட்டார். பவுத்தர்களும், சமணர்களும் நாத்திகர்கள் என்றே சொல்லப்பட்டுக் கழுவேற்றப்பட்டனர்; கொல்லப்பட்டனர்! உலகத்தில் பல நாத்திகச் சங்கங்களில் உறுப்பினர்களாக அமெரிக்காவில் 3 கோடி, இங்கிலாந்தில் ½ கோடி, ஜெர்மனியில் 1 கோடி, சீனாவில் 60 கோடி, ரஷ்யாவில் 40 கோடி, ஸ்பெயினில் ¾ கோடி, பிரான்சில் ¾ கோடி, பர்மாவில் ½ கோடி, சயாமில் 1 கோடிப் பேர் இருக்கிறார்கள்.

இந்தியாவில் தமிழ்நாட்டில் இன்று நாத்திக அரசாங்கம். கேரளாவில் நாத்திக அரசாங்கம். இவற்றால் உலகம் என்ன முழுகியா போய்விட்டது? நாத்திகம் கூடாததல்ல; இல்லாததல்ல; வேண்டாத தல்ல! நமது கடவுள்களில் ஒருவனான சந்திரன் இன்று அமெரிக்கர்களால் உதைபடுகிறான்! ஆகையால் “உண்மை”யை வரவழைத்துப் படியுங்கள். விரைவில் வாரப் பத்திரிகையாக ஆக்குங்கள்!"

15 -ந் தேதி வரை கிளர்ச்சியாளர் பட்டியலில் 1,820 பேர் தங்களைப் பதிவு செய்து கொண்டவர்கள் ஆவார்கள். இந்நிலையில் 17-1-70 அன்று “விடுதலை” முதல்பக்கம் ஏழுகாலக் கொட்டை எழுத்துச் செய்தியாக -“முதல்வர் அறிக்கை; தகுதியினால் அனைவரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் கொண்டுவர அரசு முன் வருகிறது. பெரியாரவர்கள் கிளர்ச்சியினை நிறுத்தி வைக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்” என்று வந்தது. 18-ந் தேதி பெரியார் கும்பகோணத்தில் இருந்தார். அங்கே சமூக சீர்திருத்த மாநாட்டை முத்துப் தனபால் தலைமையில் ஏ.ஆர். ராமசாமி திறந்து வைத்தார். வீரமணி தலைமையில் கருத்தரங்கம் நடந்தது. அமைச்சர் என்.வி. நடராசன் பேசினார். பெரியார் பேசும்போது, முதல்வரின் அறிக்கையை ஏற்று, அவசியமான அளவுக்குக் கிளர்ச்சியை ஒத்திப்போடலாம் என்றார். தம் இனத்திற்குக் கேடு செய்யும் பத்திரிகைகளைக் கொளுத்த ஒரு போராட்டம் நடத்தியே தீரவேண்டும் என்றார் பெரியார். 22-ந் தேதியன்று “விடுதலை"யின் முதல் பக்கச் செய்தி, பெரியார் திருச்சியிலிருந்து தொலைபேசியில் கூறியதாகும்:- “முதல்வரின் உறுதி மொழியை ஏற்றுப் பெரியார் அறிக்கை. கிளர்ச்சி ஒத்தி வைக்கப்