பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/538

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

537


தூஷிக்கவில்லை என்றும், தாம் தாக்கப்பட்டதற்கும் தி.மு.க.விற்கும் சம்பந்தமில்லை என்றும் கூறினார்.

நம் நாட்டுப் பார்ப்பனர் வாழ வேண்டுமானால் - என்ற தலைப்பில் பெரியாரால் எழுதப்பட்ட தலையங்கம் 14-ந் தேதி "விடுதலை"யை அலங்கரித்தது:- "நாம் ஒரு சிறிதாவது அறிவு பெற்றுப் பகுத்தறிவுவாதிகள் ஆகிவிட்டோமானால் கொல்லுவாரின்றியே பார்ப்பனன் செத்தான்' என்ற நிலைதான் ஏற்படும். அவர்கள், மேல் வகுப்பு மக்களாக வாழ்வதற்காகவே, கடவுள் மத நம்பிக்கைகளை நம்மிடையே பரப்புவதுதான் பார்ப்பனர் கொள்கை. அவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் போல் காட்டிக் கொள்வது நம்மை நிரந்தரமாய் ஏமாற்றி வைக்கவே ஆகும்," என்றார். பாப்பிரெட்டிப் பகுதியில் பேசும்போது பெரியாரின் ஆத்திரம் மிகவும் மேலெழுந்து நின்றது. 22-2-70 அன்று! “நம் நாட்டிலுள்ள கோயில்களை இடித்துத் தரைமட்டம் ஆக்கும் வரை சாதி ஒழியாது; கோயில்களிலுள்ள சிலைகளை உடைத்து, ரோட்டுக்கு ஜல்லியாகப் போடும் வரை சாதி நிலைபெற்றுதான் இருக்கும்" என்றார் பெரியார்!

அறநிலையத்துறை அமைச்சர் கே.வி. சுப்பய்யா, 24-ந் தேதி, விவாதத்துக்குப் பதிலளித்தபோது; கர்ப்பக்கிரகத்தில் அனைத்துச் சாதியினரையும் அனுமதிக்கும் சட்டத்திருத்தம்; தமிழில் அர்ச்சனை; கோயில் சொத்துகளின் மதிப்பீடு; கோயில் நிலங்களைக் கணக்கெடுத்தல்: பெண்களையும் அறங்காவலர்களாய் நியமித்தல் ஆகிய முற்போக்கான கருத்துகளை உரைத்தமைக்காக "விடுதலை" 25-ந் தேதி, பாராட்டியிருந்தது. 23-ந் தேதி திருச்சி சிந்தனையாளர் கழகத்தில், மீண்டும் பிராமணாள் போர்டு அழிப்புக் கிளர்ச்சி தொடங்க வேண்டியிருக்கும்" என்று பெரியார் பேசினார். 26-ந் தேதி முதல் 4 நாள் பெரியார் பெங்களூரில் ஓய்வு எடுத்தார்.

பெரியாரின் சாதி ஒழிப்புப் பணிகளை வெகுவாகப் புகழ்ந்தும், மாணவர்கள் கலப்பு மணம் புரிந்து கொள்ள வேண்டுமென்றும், 26-3-70-ல் அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாச் சொற்பொழிவில் டாக்டர் எஸ். சந்திரசேகர் வலியுறுத்தினார். மாயூரத்தில் ஏப்ரல் 11-ஆம் நாள் திராவிடர் கழக மாநாடு, இரா. சண்முகநாதன் தலைமையில்; பெங்களூர் விசாலக்குமி சிவலிங்கம் திறப்பாளர்; சுந்தரலீலா சிங்கம் கொடி உயர்த்தல். மறுநாள் சமூக சீர்திருத்த மாநாட்டின் தலைவர் கி. வீரமணி; திறப்பாளர் புதுவை அமைச்சர் எஸ். இராமசாமி. தடைசெய்யப்பட்ட நூல்களின் மீதுள்ள தடையை ரத்துச் செய்ய வேண்டும். ஏப்ரல் 26 முதல் மீண்டும் * பிராமணாள்" அழிப்பு முதல் நாளே சம்பந்தப்பட்டவர்க்கு அறிவித்து விடவேண்டும்; என்று தீர்மானங்கள் நிறைவேற; இருநாளும் பெரியார் பேச்சு, திருநாளாக அமைந்தது! இதனையடுத்துப் பல ஊர்களில் தாமே