பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/626

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

625





 
18. நிறைந்தார்
மணியம்மையார் உடல்நலிவு - ஆர்க்காடு மாநாட்டில் தீ - பெங்களுர் மாநாடு - தஞ்சை விழா - மேடை வேன் அன்பளிப்பு - சென்னையில் பிறந்த நாள் விழா - மதுரை கருஞ்சட்டை மாநாடு - திருச்சி சிந்தனையாளர் கழக விழா - சென்னையில் தமிழர் சமுதாய இழிவு ஒழிப்புக் கிளர்ச்சிக்கு நாள் குறித்தது - தியாகராய நகர் பேருரை - உடல் நலிவு - வேலூர் மருத்துவ மனையில் .... நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்தார்! 1973 முதல், 1979 - ஆம் ஆண்டு முடிய, .

1973 - ஜனவரி 1-ந் தேதியும் பெரியார் புத்தாண்டுச் செய்தி வழங்கியருளினார். “1972 - ல் நமது தி.மு.க அரசு மக்களுக்கு உணவு, கல்வி, மற்ற வாழ்க்கை வசதிகளைச் செய்து கொடுத்தது. அதனால் மக்கள் மனநிறைவோடு வாழ்ந்து வருகிறார்கள். ஆயினும் சில பேர் பொறாமையாலும், பதவி ஆசையாலும், சில தொல்லை கொடுத்து வருகிறார்கள் என்றாலும், அதையெல்லாம் சமாளித்து, அரசு பணியாற்றி வருகிறது. வேறு எந்த மாநிலத்திலும் நமது ஆட்சியில் காணப்படும் அளவு பொறுப்பும் திறமையும், மேன்மையும் இருக்கவில்லை . மேலும் நமது அரசு, முற்போக்கான மக்கள் நலக்காரியங்களைச் செய்து வர வேண்டுமானால், 1973 லும் தொடர்ந்து நம்முடைய ஆதரவைத் தந்து வர வேண்டும்” என்பதுதான் பெரியாரின் புது வருட வாழ்த்து.

மாணவர்களின் அமைதியின்மைக்குக் காரணம் கல்வித் திட்டந்தான் என்பது பெரியாரின் அசைக்க முடியாத கருத்தாகும். “மாணவர்களுக்கு கல்வி இலவசமாகி விட்டது பலருக்குச் சாப்பாடும், புத்தகமும் கூட இலவசமாகக் கிடைக்கின்றன. நிர்வாகிகள், பணம் சம்பாதிக்கும் ஒரு வழியாகக் கருதியே பல தனியார் பள்ளிகளை நடத்தி வருகின்றனர். ஆசிரியர்கள், சம்பளம் ஒழுங்காகக் கிடைத்தால்