பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

62


என்பதால். என் அண்ணனைக் கண்டால் பிடிக்காது. அண்ணனும் அதை லட்சியம் பண்ணுவதில்லை. அம்மாவுக்குக் காசுமேல் நிரம்பக் குறி. சாப்பிடாமல் கூடச் சேர்த்து வைப்பார்கள். வருடம் எப்படியும் ஆயிரம் ரூபாயாவது மீதமிருக்கும். அண்ணனுக்குப் பணம் தேவையாயிருக்கும். அம்மாவிடம் போய் உட்கார்ந்துகொண்டு பணம் கேட்பார். அம்மாவோ ‘என்னிடம் ஏது பணம்?’ என்பார்கள். என்னவெல்லாமோ கூறிப்பார்ப்பார். பணம் தரமாட்டார்கள். கடைசியில், ‘இந்தாம்மா? நீ செத்தால் நான்தான் கருமம் செய்யணும். அவன் கொள்ளிகூட வைக்க மாட்டான். நீ பணம் கொடுத்தால்தான் செய்வேன், இல்லாவிட்டால் நீ செத்தவுடன் நான் எங்கேயாவது ஊருக்குப் போய்விடுவேன்’ என்பார்.

உடனே எங்கம்மா, ‘ஏதோ ஒரு பிள்ளைதான் அப்படிப் பிறந்து விட்டது. நீ அப்படியெல்லாம் செய்துவிடாதே. இந்தா’ என்று கூறிப் பணம் கொடுத்து விடுவார்கள்.”