பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/650

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

649



14 ந் தேதி சேலத்தில் உரையாற்றிய பெரியார் "மதச் சார்பற்ற நாட்டில் நேற்று ராவணனைக் கொளுத்தி, ராம் லீலா கொண்டாடலாமா? அப்போது நான் ஏன் இராமனைச் செருப்பால் அடிக்கக் கூடாது? ஆகவே, இந்தக் கிளர்ச்சியில் சிறைசெல்ல, மற்றும் உயிர்த் தியாகம் செய்யத் தயாராக உள்ளவர்கள் முன்வந்து பெயர் கொடுங்கள். வர இயலாத மற்றவர்கள் பொருளுதவியாவது செய்யுங்கள்” என்று வேண்டினார். மேலும் அன்றைய "விடுதலை" யிலும் “தமிழர்கள் சூத்திரர், பார்ப்பனரின் தாசி மக்கள் என்கிற இழிவு நீக்க மகாநாடு" என்னும் தலையங்கமும் வரைந்திருந்தார். “சென்னை அல்லது திருச்சியில் டிசம்பரில் கூட்டுவதாக இருக்கிறேன். தமிழ்நாட்டு அரசாங்கத்துக்கு இதில் அதிகாரமில்லாததால், நம்முடைய இந்தப் போராட்டம் இந்திய அரசாங்கத்திற்கு எதிராகத்தான். போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாதவர்கள் - ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் கூட - இதற்குப் பொருளுதவி வழங்கலாம்;" என்று விளக்கியிருந்தார் பெரியார்.

அக்டோபர் 16 ந் தேதி வெளியான செய்தி ஒன்று; உலகப் புகழ் பெற்ற அமெரிக்க பவுத்த குரு பிரடரிக் வி. லஸ்டிக் என்பார் 1954 ல் பர்மாவில் பெரியாரைச் சந்தித்தவர். உருவத்திலும் சிந்தனையிலும் அவர் சாக்ரட்டீசை ஒத்தவர். அன்னார் இந்த ஆண்டு பெரியார் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகளில், பர்மா நாட்டில் பங்கேற்றவர். 30ந் தேதி மலேசியாவில் பெரியார் - அண்ணா பிறந்த நாள் விழாக்களில், முருகு ' சுப்ரமணியம் பெருமிதத்துடன் கலந்து கொண்டார்.

18 ந் தேதி பிரதமர் இந்திரா காந்தி, புவனேஸ்வரில் நிருபர்கள் கேட்ட போது, “தி.மு.க. தனிநாடு கேட்க வில்லை . ஆனால் தனிநாடு கேட்கின்ற ஈ.வெ. ராமசாமியை ஆதரிக்கிறது. கருணாநிதி கேட்பது மாநில சுய ஆட்சியை விட அதிகம்” என்று பதில் கூறியிருந்தார்.

"விடுதலை" யில், மாவட்டத் தலைவர்களுக்கு, என்று ஒரு பெட்டிச் செய்தி 17 ந் தேதி வெளியிடப்பட்டது:- “வட ஆர்க்காடு, தர்மபுரி, திருச்சி, மதுரை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கழக ஆக்க வேலைகளில் ஒரு முயற்சியும் நடைபெறவில்லை. என்னுடைய கூட்டங்களே ஏற்பாடு செய்யக் காணோம்! வர இருக்கின்ற இழிவு நீக்க மாநாடுகளுக்காவது, ஒத்துழைப்புத் தருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்! ஈ.வெ. ராமசாமி.”

அக்டோபர் 23 ல் முதல்வர் கலைஞர் ஆரணியில் பேசுகையில், “சுயமரியாதைக் கொள்கைகள்தான் தி.மு.க ஆட்சியின் கொள்கையாகும். தனக்கு கண்பார்வையில்லாததால் புறக்கணிக்கப் படுவோமோ என்ற தாழ்வு மனப்பான்மையைப் போக்குவதே கண்ணொளித் இட்டம்; சமுதாயத்தால் ஒதுக்கப்படுவோமோ என்ற அச்சத்தைப் போக்கி வாழ்வில் தன்னம்பிக்கை ஊட்டுவதே பிச்சைக்காரர்