பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/651

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

650

பகுத்தறிவு பகலவன் தந்தை


மறுவாழ்வுத் திட்டம்; மனிதனை மனிதன் இழுக்கின்ற மானங்கெட்ட செயலைப் போக்குவதே கைரிக்‌ஷா ஒழித்து சைக்கிள்ரிஷா வழங்கும் திட்டம். இவை யாவுமே சுயமரியாதை அடிப்படையில்தான் செய்யப்படுகின்றன. அண்ணாவைத் தானைத் தளபதியாய்க் கொண்ட பெரியாரிசமே எங்களுக்கு வழிகாட்டுகிறது!" என்றார் இறும்பூது கொண்டு. அடுத்த 30 ந் தேதி சென்னையில் "தி.கவுக்கும் தி.மு.கவுக்கும் உள்ள உறவு தனித்தன்மை வாய்ந்ததாகும். திராவிடர் கழகத்தைத் தடைசெய்யத் தேவையில்லை என இந்திரா அம்மையாரே சொன்ன பிறகு, நான் என்ன சொல்ல இருக்கிறது?" என்று நிருபர்களுக்கு விடையளித்தார் கலைஞர்.

25.10.73 பகுத்தறிவாளர் கழகத்தில் பேசிய கம்யூனிஸ்டு (வலது) தோழர் தா.பாண்டியள் எம்.ஏ., பி.எல்., “தமிழ் நாட்டுக்குப் பகுத்தறிவு அடிப்படையில் ஆழமான சமூக சீர்திருத்தப்பணி தேவைப்படுகிறது. இதற்கு நாங்கள் எப்போதும் ஆதரவு தருவோம்" என்றவர்; இன்றளவும் வார்த்தையைக் காப்பாற்றி வருகின்றார்!

பெரியார் பேனாவை எடுத்து விட்டார். 23, 24, 25, 26 தேதிகளில் தொடர்ந்து "விடுதலை" யில் சிறப்பான தலையங்கக் கட்டுரைகள் வெளியாயின. முதல் நாள் நம் கடமை. "சென்னையில் டிசம்பர் 8,9 தேதிகளில் இழிவு ஒழிப்பு மாநாடுகள் நடைபெறும். மிகச் சமீபகாலம் வரையில் தமிழ் நாட்டில் நமது தஞ்சை, திருநெல்வேலி மாவட்டங்களில், பார்ப்பனர்கள் தங்கள் தெருக்களில் பஞ்சமர்களை நடக்க விடுவதில்லை. கக்கூஸ் எடுப்பதற்குக்கூட ஐந்தாம் சாதியினரை அனுமதிக்காமல், நாலாம் சாதி சூத்திரரையே கக்கூஸ் சுத்தம் செய்வதற்கும் பயன்படுத்தி வந்தார்கள், எனக்குத் தெரியும். 1940 ஆம் ஆண்டு வரையில் ரயில் நிலையங்கள், சத்திரங்கள், பொது விடுதிகள், கோயில்களில் பார்ப்பனருக்குத் தனியிடம் என்பது இருந்தது. வெளிப்படையாகத் தெரியாமல் அதே நிலைமைகள் இப்போது மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதே ஒழிய, உண்மையில் அதற்கான ஆதாரங்களில் மேலும் பலப்பட்டு வருகின்றன. அதாவது அரசியல் சட்டத்திலும் சாதிப்பிரிவு இடங்கொண்டு விட்டது. இந்த ஜாதிக்காரர்களோ, பதவிக்காரர்களோ, பிரபுக்களோ கவலைப் படுவதில்லை. நாம்தான் இழிவை நீக்கி மானம் பெறுவதற்கு ஆகப் போராட வேண்டும்."

இரண்டாம் நாள் “சிந்தித்து ஆவன செய்ய வாருங்கள்" என்பதும், முதல்நாள் போலவே அன்பழைப்பு. மூன்றாம் நாள் வருவது வரட்டும் “ பிரிவினை கேட்டால் ஏழாண்டு சிறைத் தண்டனை என்ற சட்டத்தை நிறைவேற்றியதே டில்லி அரசாங்கம். அதற்குத் தெரியாதா இது அநீதி என்று? அக்கிரம ஆட்சி நடத்துகிறோம் என்று தெரிந்துதான் செய்திருக்கிறது. அதனால்தான் நாம் கேட்கிறோம். நீ யார், நான் யார்?