பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/652

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

651


நீ வேறு நான்வேறு” என்று, நாலாம் நாளான 26.10.73 எனது கருத்து என்ன சொல்கிறது? "இப்போது டில்லி மூர்க்கத்தனமாக முனைந்து தி.மு.க ஆட்சிக்கும் தொல்லை கொடுக்கப் பார்க்கிறது. தி.மு.க ஆட்சி ஒழிக்கப்பட்டால் தி.க . தானே புகலிடம்! ஆட்சியிலிருந்து தி.மு.க விலக்கப்பட்டால், ஏதோ பலபட்டறைதான் ஆட்சிக்கு வரும். அல்லது, அம்மா இந்திராவே ஓர் ஆறுமாதம் ஆளும் பார்க்கலாமே அது எப்படி நடக்கும் என்பதை உங்களைச் சூத்திரனாக, இழிமகனான விட்டு விட்டு நான் சாகமாட்டேன்! இழிவு நீக்கப் போராட்டத்தில் நான்தான் முதலில் ஈடுபடுவேன் என்னைப் பொறுத்த வரையில், ஒண்டியாய் இருந்தாலும், சமுதாய இழிவு ஒழிப்புத் தொண்டு, எப்படியும் நடத்தப்பட வேண்டியதுதான்!,"

"தமிழர்களே! பிரிவினைக்காகப் பிரிவினை கேட்கவில்லை. நான் சூத்திரன், தாசிமகன் என்கிற இழிவு நீங்கப் பிரிவினை தவிர வேறு வழி என்ன?" இது 30.10.73 "விடுதலை" யின் பெட்டிச் செய்தி.

4.11.73 அன்று திருச்சி சிந்தனையாளர் கழகம் பெரியாரின் 95வது பிறந்த நாளைக் கொண்டாடியது. அமைச்சர்களான என்.வி. நடராசன், அன்பில் தர்மலிங்கம் இருவரும் கலந்து கொண்டு, தாங்களும் பதவியை உதறிவிட்டுப் பெரியாருடன் போராட்டத்தில் கலந்து கொள்வதாக, உணர்ச்சிமயமாகி அறிவித்தார்கள். “நீங்கள் பதவியிலே இருங்கள்; நாள் முதற்பலி ஆகிறேன்" என்று கூறிய பெரியார், உடல் நலமில்லாத நிலையிலேயே அரியதொரு பேருரை நிகழ்த்தினார்:“பெருமைக்குரிய தலைவர் அவர்களே! மாண்புமிகு அய்யா அமைச்சர் பெருமான் அவர்களே! தாய்மார்களே! பெரியோர்களே! சட்டசபை அங்கத்தினர்களே! இன்றைய தினம் என்னுடைய தொண்ணூற்றய்ந்தாவது பிறந்தநாள் விழா என்னும் பேரால் இம்மாபெரும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதில் அநேக நண்பர்கள் என்னைப் பற்றிச் சொன்னார்கள். நான் அவைகளைக் கேட்டுத்தான் ஆக வேண்டும். வேறு வழி இல்லை. அவர்களுக்கு நான் என்னுடைய மனப்பூர்த்தியான நன்றியறிதலை உள்ளன் போடு - மனதோடு - தெரிவித்துக் கொள்கிறேன்.

தோழர்களே! எனக்கு உடல் நலமில்லை. மூன்று நாளாய் விடாமல் வயிற்றுப்போக்கு. இரண்டு நாளாய்ச் சாப்பாடு இல்லை இன்றைக்குத்தான் ஒரு இட்லி சாப்பிட்டேன். ஆனாலும் கலந்து கொள்கிறேன். இம்மாதிரியான மகிழ்ச்சியைப் பார்க்கிற போது, அடிக்கடி வந்தால் தேவலாம் என்கிற மாதிரி - ஆண்டு விழா வரணும் என்று தோன்றுகிறது. ஆனால், உடல் நிலையைப் பார்க்கிற போது இது எனக்குப் பெரிய தொந்தரவு மாதிரி தான் காணப்படுகிறது. எப்படி இருந்தாலும் சரி.