பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/654

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

653


வந்தார்:- இப்படி இருக்கிறது நிலைமை; வேலையை ஒழித்துப் போடுவான் போலத்தான் இருக்கிறது; எந்தச் சாக்காவது சொல்லி இல்லை, நானே விலகிக் கொள்ளட்டுமா? என்ன சொல்கிறீர்கள்? என்று கேட்டார். நான் சொன்னேன்: விலக வேண்டாம்; அவனாக விலக்குகிற வரைக்கும் அவனாக விலக்கினால் இன்னும் கொஞ்சம் ஆள் சேருவார்கள் நமக்கு. விலகாதீர்கள்; இருங்கள் - என்றேன்.

அது இன்னும் கொஞ்ச நாளில் நடக்கும், சீக்கிரத்திலே, இப்போதே சி.அய்.டி. ஆங்காங்கே வந்து ரிப்போர்ட் பண்ணுகிறான். இப்போது அய்யா அமைச்சர் அன்பில் இங்கே வந்தது எல்லாம், உடனே இப்போது போயிருக்கும் டில்லிக்கு! இவர் இங்கே இந்தக் கூட்டத்திலே இருந்தார்; இவரை வைத்துக் கொண்டுதான் இராமசாமி பேசினான் என்று! எனக்கும் இவருக்கும் இந்தப் பேச்சிலே ஒன்றும் சம்பந்தமில்லை; மற்ற பேச்செல்லாம் இருக்கலாம்; அதே மாதிரியே ஒப்பந்தம் எங்களுக்குள்ளே! நீங்கள் இதிலே கலந்து கொள்ளக்கூடாது; நானும் உங்களை எதிர்பார்க்கவில்லை என்று! ஆனாலும், அவன் புள்ளி போட்டுக் கொண்டு இருக்கிறான்.

சரி, அப்படி வந்தாலும் நான் அதற்காக ஒன்றும் கவலைப்படவில்லை . நம்மாலே வரக்கூடாது என்கிற எண்ணம்; வந்துவிட்டது! வேறே அவர்களுக்கு நாதி இல்லை; என்கிட்டேதான் வந்தாகணும் மந்திரி சபையை ஒழித்துவிட்டார்கள் என்றால் அவர்கள் எங்கே போவார்கள்? வந்தாக வேண்டும். அப்புறம் இன்னும் நன்றாக நடக்க வேண்டும்! இப்போது அவர்களுக்கும் நமக்கும் சம்பந்தமில்லை.

நாம் என்ன பண்ணுவது இப்போது? இப்போது நாம் சமுதாயத்துப் பேரைச் சொல்லி, பார்ப்பானை ஒழித்துப் பதவிக்கு வந்து விட்டோம். நமக்கு அப்புறம்? நம்மிலே இருக்கிறார்கள் அநேகம் பேர் காட்டிக்கொடுக்கவும், மற்ற காரியங்கள் செய்யவும்! என்ன அவமானம் வந்தாலும் லட்சியம் செய்யாமல், பதவிதான் பெரிது என்பதற்கும் ஆட்கள் இருக்கிறார்கள்; அவர்கள்தான் மெஜார்ட்டி!

நம்மை விட்டால், முன்னேற்றக் கழகம் ஒன்று மூணே முக்கால் பேர்; அவர்களும் நம்மிடம் வந்துவிடுவார்கள். கம்யூனிஸ்ட் எவன் காலை நக்கியாவது வயிறு வளர்க்கிறதுதான் அவன் வேலை. உலகத்திலேயே கொள்கை இல்லாத ஒரு கூட்டம் என்றால் நம் கம்யூனிஸ்டு தான். காங்கிரசு - என்ன பண்ணியாவது பதவிக்கு வரணும் என்கிறவன் அவனோடு போட்டி போடுகிற இன்னொரு காங்கிரசு. இப்போது துவக்கின ஒரு கட்சி இருக்கிறது. அண்ணா முன்னேற்றக் கழகம் என்று, அவர்களுக்கு என்ன வேலை? எதிரிக்கிட்டே பேசிக் கொண்டு, இவர்களை ஒழித்துவிட்டு வருகிறேன்; எனக்கு ஏதாவது எச்சல்கலை போடுகிறாயா? என்று கேட்கிறார்கள். அப்புறம் பார்ப்பான் கட்சி