பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/656

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

655


ஒரு கப் கஞ்சி, தண்ணீர்கூட இல்லை. இன்று இன்னொரு இட்லி கொடு என்றேன். அம்மா முடியாது என்று சொல்லிவிட்டார்கள் நாசமாய்ப் போகட்டும் என்று சொல்லி விட்டு வந்தேன்.

இப்போது நீங்கள் எல்லாம் பொறுப்போடு வெளியே போகணும். நீங்கள் வந்து அந்த மாநாட்டில் கொடுக்கிற உற்சாகம் தான் மக்களுக்கு நல்லது ஆகும். சும்மா மாநாடு நடத்தி விட்டுப் போகிறதில்லை; நடந்த உடனே கிளர்ச்சி ஆரம்பிப்போம்! நாம் அவர்களுக்கு நோட்டீஸ் விடணும் - என்ன, இதை மாற்றுகிறதற்கு வழி பண்ணுகிறாயா? இல்லை, உன்னை ஒழிக்கிறதா? என்று மாநாட்டுத் தீர்மானம் அதுதான் வரும் அதில்லே time போடுவோம். அது ஆன உடனே, ஆரம்பித்துவிடுவோம்!

நான் ஒன்றும் சும்மா இருந்து கொண்டு அதிகாரம் பண்ணுகிறாற் போல் இல்லை. முதல் பலி நான். என்னைக் கொடுத்து விட்டுத்தான் உங்களைக் கூப்பிடுவேன். அருமைத் தோழர்களே! கொஞ்சம் சீரியஸாக, கொஞ்சம் தீவிரமாகச் சிந்தியுங்கள். என்னுடைய இஷ்டத்தைச் சொன்னேன். இன்னும் உங்களுக்குத் தோன்றுகிற தெல்லாம் சொல்லுங்கள்!

நான் இப்போதும், கடைசியாகவும் வேண்டிக்கொள்கிறேன். மந்திரிகளோ, முன்னேற்றக் கழகக்காரரோ இதில் கலந்து கொள்ளாமல் இருக்கணும். ஏதோ அவர்களாலே ஆன உதவியைச் செய்யட்டும்!

ஏன் என்றால், நான் முன்னமேயே சொன்னேன். "கடைசியாகவும் சொல்லுகிறேன். இது கடைசி முயற்சி, கடைசி முயற்சி; கடைசி முயற்சி வணக்கம்"

அடுத்து பெரியார் மேற்கொண்ட சுற்றுப் பயணத்திலும் இதே கருத்தை வெளிப்படுத்தி வந்தார். 10 ந் தேதி ஜெயங்கொண்டத்தில், முதலில் வடநாட்டார் கடைமுன் மறியல் செய்யலாம், என்றார். அடுத்த நாள் தாதம்பேட்டை பழுவூரில், வசதியுள்ளோர் பொருளுதவி செய்யுங்கள்; வசதியற்றவர் உடலுழைப்புத் தாருங்கள்; உணர்ச்சி உள்ளவர் சிறை செல்ல வாருங்கள் - என்றார்.

11.11.73 அன்று முக்கிய தெரிவிப்பு" என்ன வென்றால்...8, 9 மாநாடுகட்கு முன்பு பெரியார் ஒரு சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். மாநாடு ஒரு வேளை தடை செய்யப்படலாம். அதனால் பெயர்ப்பட்டியலும், பொருளுதவியும் நேரில் பெற வருவார்கள். நவம்பர் 18 முதல் 28 முடிய, 11 மாவட்டங்களில், மணியம்மையார், தோழர்கள் ஆனைமுத்து, செல்வேந்திரன், புலவர் இமயவரம்பன்; சில இடங்களில் வீரமணியும், பெரியாருடன் வருவார்கள். 18 திருச்சி, 19 மதுரை, 20 காரைக்குடி, 21 திருநெல்வேலி,