பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/657

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

656

பகுத்தறிவு பகலவன் தந்தை


22 தஞ்சை , 23 சென்னை , 24 வேலூர், 25 கடலுர், 26 தர்மபுரி, 27 சேலம், 28 கோயமுத்தூர் ? இது தான் பயணத்திட்டம் இவ்வளவும் ஒரு அம்பாஸிடர் காரில்.

குணமென்னும் குன்றேறி நின்ற பெரியாரின் வெகுளி வெடித்துச் சிதறியது. 15 ந்தேதி தலையங்கமாய்? என்ன தலைப்பு தெரியுமா? "நமது நாட்டு அரசியல் வாதிகள் பெரிதும் மானங்கெட்ட முண்டங்களே!" சித்தரித்த விஷயமோ சித்திரை வெய்யிலைவிட வெப்பம்! “நாம் பிரிவினை கேட்கிறபடியால், ஏன் இவர்களைப் பிடித்து உள்ளே போடவில்லை ? என்று, தமிழனுக்குப் பிறந்ததாகச் சொல்லி கொள்ளும் தமிழனே துடிக்கிறான். தி.மு.க கட்சி மீதும் பழி சுமத்தி, ஆட்சியை ஒழிக்கப் பார்க்கிறான். என்ன செய்வது? தமிழரில் பலர், அல்லது சிலர், ஈனப்பிறவிகளாய் இருக்கிறார்கள். கலைஞர் மு. கருணாநிதி, சட்டப்படி இந்த நாட்டின் முதல் அமைச்சர். எல்லா விஷயங்களுக்கும் பொறுப்பும் முழு அதிகாரமும் உள்ளவர். அவர் எப்போதாவது பிரிவினை கேட்டாரா? சொல்லட்டும்! அயோக்கியப் பத்திரிக்கைகள், அவர்மீது ஏன் பாய்கிறார்கள்? மனித ஜென்மங்களாக இருந்தால், 1971-ல், எப்போது இவர்கள் கணிப்பையெல்லாம் கடந்து கலைஞர் பரிபூரண மெஜாரிட்டி பெற்றாரோ, அப்போதே இவர்களுக்கு மானம் வந்திருக்க வேண்டும். நானே கூடப் பிரிவினை கேட்கவில்லையே! எங்கள் மீது உள்ள இழிவு நீக்கப்படவில்லையானால், பிரிந்து போவது தவிர வேறு வழி இல்லை என்றுதான் சொல்லுகிறோம். நான் சாகத்துணிந்தவன்; எனக்குச் சமுத்திரம் முழங்கால் அளவுதான்! அட முட்டாள்களா! நான் உங்களுக்கு சேர்ந்துதானே பாடுபடுகிறேன்! டில்லி எழவு எடுப்பதற்கு முன் உங்களோடு எழவா? மானமுள்ளவர்களானால் என்னோடு சேர்ந்து கொண்டு, நீங்களும் போராட வாருங்கள்? மற்ற யோக்கியர் வாலை அடக்கிக் கொண்டு சும்மா வாழுங்கள்

16.11.73 அன்று கலைஞரும் இதே கருத்தை வெளியாக்கினார்:"தி.மு.க ஆட்சியைக் கவிழ்க்கச் சதித்திட்டம் தயாராகி, அதில் சில பெரிய மனிதர்களும் ஈடுபட்டுள்ளனர். சட்டத்தைத் திருத்த வேண்டிப் பிரதம மந்திரிக்குத் தாம் கடிதம் எழுதியிருப்பதாக, முதல்வர் கலைஞர் 2.12.73 சென்னையில் சட்ட மன்றத்தில் அறிவித்தார். பெரியாரின் கைப்பை காணாமல் போய்விட்டது. PERIYAR என்று அதில் பொறிக்கப்பட்டிருக்கும். சில தஸ்தாவேஜிகள் உள்ளன என்று 3.12.73 தேதியிட்டு வீரமணி பெயரில் ஓர் அறிவிப்பு வந்தது. சேலம் ரா. தண்டபாணியிடமிருப்பதாகத் தகவல் வந்து விட்டது என்று 6, 12.73 அன்றே செய்தி பிரசுரமாயிற்று.

டிசம்பர் 8,9 திேகளில் சென்னையில் நடக்கும் இழிவு ஒழிப்பு மாநாட்டுக்கு வரவேற்புக்குழு அமைக்கப் பெற்றது. தலைவர்