பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/679

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

678

பகுத்தறிவு பகலவன் தந்தை



அச்சம்‌ என்பதே அறியாதவர்‌ தந்தை பெரியார்‌. தமது கொள்கையிலே தளராத பிடிவாதமுடையவர்‌. எவ்வளவோ மாறுபாடுகளுக்கு இடையிலும்‌, ராஜாஜியும்‌ பெரியாரும்‌ மிக நெருங்கிய நெடுங்கால நண்பர்கள்‌.

ஊர்வலம்‌ செல்லும்‌ வழியில்‌ காட்சிகள்‌.

தமிழகத்தின்‌ மூன்னாள்‌ முதல்வர்‌ காமராஜர்‌, பெரியாருடன்‌ தமிழ்‌ நாட்டுத்‌ தேசிய இயக்கங்களில்‌ பணியாற்றியவர்‌. முன்னாள்‌ முதல்வர்‌ பேரறிஞர்‌ அண்ணாவும்‌, இன்றைய முதல்வர்‌ கலைஞரும்‌, பிற அமைச்சர்‌ பெருமக்களும்‌, பெரியார்‌ அமைத்த சுயமரியாதை இயக்கம்‌, திராவிடர்‌ கழகம்‌ ஆகியவற்றில்‌ பணியாற்றிவர்கள்‌ ஆவர்‌.

பெரியாரும்‌ ராஜாஜியும்‌, பெரியாரும்‌ காமராஜரும்‌, பெரியாரும்‌ அண்ணாவும்‌, பெரியாரும்‌ முதல்வர்‌ கலைஞரும்‌, பெரியாரும்‌ அமைச்சர்களும்‌ உள்ள காட்சிகள்‌.

அவர்‌ சொன்னார்‌ இவர்‌ சொன்னார்‌ என்று நம்பி அறிவிழந்து தடுமாற்றம்‌ அடைய வேண்டாம்‌; எவர்‌ சொன்ன சொல்‌ எனினும்‌ அதனை உன்றன்‌ இயல்பான பகுத்தறிவால்‌ எண்ணிப்‌ பார்ப்பாய்‌' - இதுதான்‌ பெரியாரின்‌ வாக்கு. சுயமாகச்‌ சிந்தனை. செய்து, தெளிவாக முடிவுகளை வரையறுத்து, உலகச்‌ சிந்தனையாளர்களும்‌ ஒப்புக்‌ கொள்ளும்‌ விதமாகப்‌ பெரியாரின்‌ வாதங்கள்‌ அமையும்‌. பல்கலைக்‌ கழக ஆராய்ச்சி மாணவர்கள்‌ இன்று பெரியாரின்‌ தத்துவங்களை ஆராய்ந்து வருகின்றனர்‌.

ஈரோட்டில்‌ பெரியார்‌ சிலை இறப்புவிழா- 17.9.71.

கடலூரில்‌ பெரியார்‌ சிலை திறப்புவிழா 13.8.72.

இறுதி ஊர்வலத்தில் மக்கள்‌ கூட்டம்‌.