பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/678

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

677



வைக்கம்‌ வீரர்‌ என்று சிறப்புப்‌ பெயர்‌ பெற்ற அய்யா, தண்டாமை ஒழிப்புக்காக இறுதிவரை அரும்பாடு பட்டுள்ளார்‌.

ராஜாஜி ஹாலில்‌ மக்கள்‌ அஞ்சலி.

சுயமரியாதைத்‌ திருமணம்‌ என்கிற சீர்திருத்த முறையை நாட்டுக்கு அறிமுகம்‌ செய்தவரே அவர்தாம்‌. பேரறிஞர்‌ அண்ணா அவர்களின்‌ அரசு அதற்குச்‌ சட்ட வடிவம்‌ தந்துள்ளது.

பெரியார்‌ திடலில்‌ நடைபெற்ற திருமணக்‌ காட்சிகள்‌ திருச்சியில்‌ ஊர்வலம்‌. பெரியாரும்‌ அண்ணாவும்‌.

பிற்படுத்தப்பட்ட மக்களின்‌ முன்னேற்றத்திற்காக அவர்‌ தமது வாழ்நாள்‌ முழுவதும்‌ போராடினார்‌. தமிழ்‌ நாட்டில்‌ அவர்‌ கால்‌ படாத ஊரே இல்லை. 60 ஆண்டுப்‌ பொது வாழ்வு அவருக்கு எண்ணற்ற தொண்டர்‌களைத்‌ திரட்டித்‌ தந்துள்ளது.

ராஜாஜி ஹாலில்‌ மக்கள்‌ கியூவில்‌ வருவது. மணியம்மையார்‌, வீரமனரி, சம்பந்தம்‌. சோகமாய்‌ இருப்பது.

பழமைக்‌ கருத்துகளைச்‌ சாடுவதிலும்‌, பகுத்தறிவுக்‌ கொள்கைகளைப்‌ பரப்புவதிலும்‌ அவருக்குத்‌ தணியாத ஆர்வம்‌ உண்டு. அதற்காக அவர்‌ ஓய்வின்றி உழைத்தார்‌.

பெரியார்‌ தமது வேனில்‌ செல்வது. மதுரையில்‌ ஊர்வலம்‌. தொண்டர்கள்‌ அணி வகுப்பு.

சமுதாய இழிவு ஒழிய வேண்டும்‌ என்பதற்காக அவரும்‌ அவரது தொண்டர்களும்‌ கருப்புச்‌சட்டை அணிந்தனர்‌.

ராஜாஜி ஹாலில்‌ கருஞ்‌சட்டை அணிந்திருக்கும்‌ தொண்டர்களின்‌ இறுதி வணக்கம்‌.

ரஷ்யா, ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற மேல்‌ நாடுகளுக்கும்‌, மலேசியா போன்ற கீழ்த்திசை நாடுகளுக்கும்‌ அவர்‌ சென்று வந்துள்ளார்‌. அவரது புரட்சிகரமான கருத்துக்‌களுக்காகப்‌ பலமுறை சிறைத்‌தண்டனை பெற்றுள்ளார்‌.

இறுதி ஊர்வலம்‌ ராஜாஜி ஹாலில்‌ இருந்து புறப்படுதல்‌.