பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/677

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

676

பகுத்தறிவு பகலவன் தந்தை



தந்தை பெரியார்‌ என்று தமிழகத்தின்‌ கோடிக்கணக்கான மக்களால்‌ அன்புடன்‌ அனழக்‌கப்படும்‌ அய்யா மறைந்து விட்டார்‌, அம்மாவோ என்னே இயற்கையின்‌ கொடுமை!

ராஜாஜி ஹாலில்‌ உடன்‌ கொண்டு வந்து வைக்கப்படுவது.

கடந்த 19,12.73 அன்று மாலை சென்னை தியாகராய நகரில்‌ நடைபெற்ற மாபெரும்‌ பொதுக்‌ கூட்டத்தில்‌ அய்யா உரையாற்றினார்‌.

பெரியார்‌ பொதுக்‌ கூட்டத்தில்‌ பேசும்‌ காட்சிகள்‌.

தமிழ்‌ மக்களைக்‌ கண்ணீர்க்‌ கடலில்‌ தத்தளிக்க விட்டு, 24-ம்‌. நாள்‌ காலை இயற்கை எய்தினார்‌.

ராஜாஜி ஹாலில்‌, மக்கள்‌ சாரை சாரையாய்‌ வந்து அஞ்சலி செலுத்துதல்‌.

தமது 85வது பிறந்த நாள்‌ விழாவைக்‌, கடந்த செப்டம்பர்‌ திங்கள்‌ 17-ம்‌ நாள்‌ கொண்‌டாடினார்‌ அய்யா.

பிறந்த நாள்‌ விழாக்‌காட்சிகள்‌ நாமகிரிப்‌பேட்டை கிருஷ்ணன்‌ நாயனம்‌.

அய்யோ அய்யோ என அலறித்‌ துடிதுடித்து, அவரால்‌ ஆளாக்கப்பட்ட பெரு மக்கள்‌, துன்ப வெள்ளத்தில்‌ அமிழ்ந்திட, நம்மை விட்டுப்‌ பிரிந்தார்‌.

மக்கள்‌, பெரியாரின்‌ சடலத்தைக்‌, கண்டு அலறி அழுதது நீண்ட கியூவில்‌ மக்கள் கூட்டம்‌.

தேசியப்‌ பாரம்பரியத்தில்‌ வந்த, மிக மூத்த தலைவர்களில்‌ பெரியார்‌. ஒருவர்தான்‌ மீதியிருந்தார்‌. காந்தியடிகளோடு நாட்டு விடுதலைப்‌ போராட்‌டத்தில்‌, தமது துணைவியாருடன்‌ ஈடுபட்டவர்‌ அய்யா அவர்கள்‌. அதற்காகப்‌ பலமுறை சிறைவாசம்‌ அனுபவித்திருக்கிறார்‌. இதனைப்‌ பாராட்டி இந்திய அரசு அவருக்குத்‌ தாமிரப்‌ பத்திர விருது வழங்கியது. தமிழக முதல்வர்‌ கலைஞர்‌, அதனைத்‌ தலைவரின்‌ இல்லம்‌ சென்று, அளித்து வந்தார்‌.

சேலத்தில்‌ 4.11.71 அன்று பெரியாருக்கு முதல்வர்‌ கலைஞர்‌ வெள்ளியினாலான சிம்மாசனம்‌ வழங்குதல்‌

பெரியார்‌ கலைஞரைப்‌ பிடித்து இழுத்து, அதில்‌ அமர்த்துதல்‌.

தாமிரப்பத்திர விருதை முதல்வர்‌ பெரியாரிடம்‌ வழங்குதல்‌.