பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/676

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

675


மணிக்குத்‌ திருச்சி பெரியார்‌ மாளிகையில்‌ நடைபெறும்‌. அனைவரும்‌ வருக என அழைத்திருந்தார்‌.

திராவிட முன்னேற்றக்‌ கழகச்‌ சார்பில்‌, நாடெங்கும்‌ பெரியார்‌ நினைவு நாள்‌ 3.1.1974 அன்று கொண்டாடப்படும்‌; அதுவரையில்‌ கழகக்‌ கொடிகள்‌ அரைக்‌ கம்பத்தில்‌ பறக்கும்‌ என்று அறிவிக்கப்‌பட்டது.

தமிழ்நாடு அரசு இரைப்படப்‌ பிரிவு, 30.12.73 அன்று, செய்தித்‌தொகுப்பு மலர்‌ எண்‌ 107 என்பதாக ஒரு செய்திப்‌ படத்தைத்‌, “தந்‌தை பெரியார்‌” என்ற தலைப்பில்‌, தமிழகமெங்கும்‌ திரையிட்டது. அதன்‌ விவர விளக்கம்‌, கேட்டபடியும்‌, பார்த்தவாறும்‌ பின்வருமாறு;–

ஓலி  காட்சி
பெரியாரின்‌ சொந்தக்‌ குரல்‌ ஒலிக்கிறது;– என்னமோ! அய்யா அப்படி எல்லாம்‌ நினைக்கிறீங்க! கவுரவத்துக்காக! நான்‌ என்னமோ என்னுடைய கடமையைச்‌ செய்யறேன்‌! இருக்குறமே உசுரோட ஏதாவது பயன்படுத்தத்‌ தகுந்த முறையிலே வாழவேணுமேன்னு இருக்குறேன்‌; அவ்வளவுதான்‌! பெரியார்‌ பேசும்‌ காட்சி.பெரியார்‌ மகிழ்ச்சியுடன்‌ இருக்‌கின்ற பல காட்ரிகள்‌ மாறி மாறி அண்மைக்‌ காட்சிகளாகப்‌ பல கோணங்களில்‌ காட்டப்‌படுகின்றன.
நானா இதை கவனிச்சேன்‌! இது அவர்களுக்கும்‌ கணக்‌கில்லே!
இருக்குறதுனாலே ஏதோ செஞ்சுக்கிட்டிருக்கேன்‌!

அவ்வளவுதான்‌!

பெரியார்‌ சாப்பிடுவது,
படிப்பது,
எழுதுவது,
பேசுவது,
உறங்குவது,

ஆகிய காட்சிகள்‌ காண்பிக்கப்‌ படுகின்றன.

(விளக்கவுரையாளரின்‌ குரல்‌ ஒலிக்கிறது:) வயதில்‌ அறிவில்‌ முதியோர்‌ நாட்டின்‌ வாய்மைப்‌ போருக்கென்றும்‌ இளையார்‌! புரட்சிக்‌ சுவிஞரின்‌ எழுச்சிமிகுவரிகள்‌! ஆகா எவ்வளவு பொருத்தம்‌!