பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/675

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

674

பகுத்தறிவு பகலவன் தந்தை


ஆகியோர் நடந்து சென்றனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் “அய்யா அய்யா” எனக் கதறி அலறி அழுது அரற்றினர்.

சரியாக 4.57 மணிக்குப் போலீசார் 36 குண்டுகள் வெடித்துத், துப்பாக்கியைத் தலை கீழாகப் பிடித்திட, போலீஸ் பேண்ட் சோக கீதம் இசைக்க, தேக்கு மரப் பெட்டியில் பெரியாரின் தேகம் வைக்கப்பட்டது. பெரியாரின் கண்ணாடியைக் கழற்றிக் கலைஞர் வீரமணியிடம் தந்தார். தேக்குப் பெட்டியின் மூலைகளில் கட்டப்பட்டிருந்த கயிறுகளை சம்பத், காமராஜ், கலைஞர், வீரமணி ஆகியோர் பிடித்துக் குழியில் இறக்கினர். காட்சி காணச் சகியாத கலைஞர் கோவென்று கதறியழக், காமராஜர் ஓடிவந்து, அணைத்துப் பிடித்து ஆறுதல் கூறினார். பெரியார் திடலில் நடைபெற்ற இத்தனையும் அண்மைத் தொலைக்காட்சி (Close Circuit TV)யில் காட்டப்பட்டதால் வெளியிலுள்ள பல்லாயிரம் மக்களும் நேரில் கண்ட நிறைவு பெற்றனர். டாக்டர் வா.செ. குழந்தைசாமியின் கவிதை வரிகள் "திராவிடத்தின் மண்ணோடும் வனியோடும் வானோடும் ஒன்றாகி வாழ்வாய் அய்யா!" எனப் பாடிய வண்ணமே, பெரியார் நிறைந்து விட்டார்!.

குடிஅரசுத் தலைவர், துணைத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், பிறமாநில முதல்வர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மன்றங்கள் அனுப்பிய அனுதாபத் தந்திகள் குவிந்த வண்ணமிருந்தன. சிறப்பானது, வைக்கம் நகர சபையின் இரங்கல் தீர்மானம், திருச்சி மருதமுத்து என்ற தோழர் தந்தை பெரியாரைக் கண்டு மனம் பொறாமல் மாரடைத்து மாண்டு போனார். முதல்வர் நிவாரண நிதியிலிருந்து 2,000 ரூபாய் அன்னாரின் குடும்பத்துக்குத் திருச்சி கலெக்டர் மூலமாக 28.12.73 அன்றே தரப்பட்டது.

27ந் தேதி கவனர் கே.கே. ஷா, ராஜா சர் முத்தையச் செட்டியார் ஆகியோர் பெரியார் திடலுக்கு வந்து மணியம்மையார், வீரமணி ஆகியோரைக் கண்டு விசாரித்தனர். அமைச்சர் ராஜாராம் இருந்து வரவேற்றார். அடுத்த 30ந் தேதி சர்வோதயத் தலைவர் ஜெயப்பிரகாசர் வந்து 15 நிமிட நேரம் தங்கியிருந்து சென்றார். அய்யா நினைவிடத்தைப் பார்த்தார். “அணி வகுப்போம், பணிமுடிப்போம்” என்று வீரமணியின் தலையங்கமும், “அடுத்து என்ன" என்று மணியம்மையாரின் பெட்டிச் செய்தியும், 28. 12.73 “விடுதலை”யில் இடம் பெற்றன.

"அன்புள்ள கழகத் தோழர்களுக்கு" என்ற தலையங்கத்தில் 29ந் தேதி ஈ.வெ.ரா மணியம்மையார், 6.1.74 அன்று திருச்சியில் கூடி முடிவெடுப்போம். என எழுதினர். 30ந் தேதி வீரமணி, திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் என்ற தன்மையில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், திராவிடர் கழக மாநிலப் பொது நிர்வாகிகள் கூட்டம், அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் தலைமையில், 6.1.74 காலை 10