பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/688

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

687


பெரியாரின் சிலையை, மத்திய அமைச்சர் ஜெகஜீவன்ராம் அவர்களைக் கொண்டு திறந்து வைத்தார். விழாவில் கலந்து கொண்ட மணியம்மையார், “பெரியார் உள்ளத்தை உறுத்திக் கொண்டிருந்த ஒரு காரியம் நிறைவேறாமலே நிற்கிறது. அனைத்துச் சாதியாரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழ்நாடு அரசின் சட்டம், உச்ச நீதி மன்றத்தால் தடை செய்யப்பட்டது. அதற்கு உயிரூட்ட, இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும். மத்திய அரசின் உதவியோடு இக்காரியம் நடைபெற, நமது மாநில அரசு முயலவேண்டும்” என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். இதற்குப் பதிலளித்த முதல்வர், "கடவுளே இல்லை என்று சொன்னவர் தந்தை பெரியார். மற்றவர்களைக் கோயிலுக்குப் போகாதீர்கள் என்று சொன்னவர் பெரியார். அப்படிப்பட்ட கொள்கை உடையவர், கோயிலுக்குப் போய் அர்ச்சனை செய்யச் சொல்வதும், எல்லா சாதியாருக்கும் அந்த உரிமை வேண்டும் என்று சொல்வதும், உண்மையில் பெரியார் சொல்லியிருப்பாரா? என்று என்னால் நம்ப முடியவில்லையே" என்றார்.

1977 அக்டோபர் 30-ம் நாள் மணியம்மையார் கைது செய்யப்பட்டார். ஏன்? தெரியவில்லை! வழக்கொன்றும் தாக்கல் செய்யப்படவில்லை . பின், விடுதலை செய்யப்பட்டார்.

இந்திராகாந்தி 1977 அக்டோபர் 30-ஆம் நாள் தமிழகம் வரும்போது கருப்புக் கொடி காட்டுவது என திராவிடர் கழகம் முடிவெடுத்தது. மணியம்மையார் முன்னின்று நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. இரண்டொரு நாட்களுக்குப் பின், தாங்களும் கருப்புக்கொடி காட்டப் போவதாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தினரும் முடிவெடுத்தனர். சென்னையில் கிண்டியருகில் வேனில் வந்த மணியம்மையாரை, இழிவாகவும் தரக்குறைவாகவும் பெரிய ஒரு போலீஸ் அதிகாரியும், போக்குவரத்து சார்ஜண்ட் ஒருவரும் பேசினர். வீரமணியையும் திட்டினார்கள். இதுவரையில் அவர்கள் மீது ஒரு நடவடிக்கையும் இல்லை அம்மையாரும் வீரமணியும் கைது செய்யப்பட்டனர். வழக்கும் தொடரப்பட்டுப் பின்னர் என்ன காரணமோ திரும்பப் பெறப்பட்டது.

ஆளுநர் ஆட்சிக் காலத்தில், சென்னை சிறைச்சாலையில், மிசா கைதிகளிடத்தில் தவறாக நடந்த சிறையதிகாரிகள் நடவடிக்கை பற்றி விசாரித்தறிய, நீதிபதி இஸ்மாயில் கமிஷன் நியமிக்கப்பட்டது. அதனிடம் வீரமணியும், என். எஸ். சம்பந்தமும் சாட்சியமளித்தனர். தாங்கள் தாக்கப்பட்டதாகவும் கூறினர். கைதியாகவும் இருந்து, சாட்சியமளிக்க வேண்டியவரும் ஆன எஸ். துரைசாமியே வழக்கறிஞராக இருந்து வழக்குரைத்தார்!

இந்திராகாந்திக்குக் கருப்புக் கொடி காட்டக் குழுமிய இடத்தில், போலீசார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தது பற்றி விசாரிக்க, நீதிபதி