பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/689

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

688

பகுத்தறிவு பகலவன் தந்தை


பி.எஸ். சோமசுந்தரம் கமிஷன் நியமிக்கப்பட்டது. அதுகூடத் தனது பரிந்துரையில், மணியம்மையாரை இழிவாகப் பேசிய அதிகாரிகள் மீது தமிழக அரசு தனி நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறியுள்ளது. சென்னை நகரில் அப்போது துணைக் கமிஷனராக இருந்த அந்தப் போலீஸ் அதிகாரிக்குப் பதவி உயர்வு தந்து, தமிழக அரசு அவரைத் துணை ஐ.ஜி.யாக நியமித்துள்ளது!

தி.மு.க.வுடன் தேர்தல் உடன்பாடு செய்து கொண்டதால், இந்திரா காந்தி அம்மையார் 20.9.1979-ல் தி.மு.க. நடத்திய பெரியார் அண்ணா விழாவில் கலந்து கொண்டது காலச் சுழற்சியன்றோ?

1978 மார்ச் 16-ஆம் நாள் ஈ.வெ.ரா. மணியம்மையார் இருதய நோயால் இயற்கை எய்தினார். பெரியாருக்குப் பின்னர், அவர்களால் ஐந்தாண்டு உயிர் வாழ முடிந்ததே ஓர் அதிசயம்! அய்யா விட்டுச் சென்ற சில பணிகளை நிறைவேற்றிடத் தாம் எடுத்துக் கொண்ட சூளுரையின் வலிமையால்தான் அவர் வாழ்ந்திருக்க வேண்டும்!

பெரியாரின் நினைவிடத்துக்குப் பின்புறத்திலேயே அம்மையாரும் புதைக்கப்பட்டு, அவர்க்கும் நினைவு மேடை எழுப்பப்பட்டுள்ளது.

கி.வீரமணி நிரந்தரப் பொதுச் செயலாளராக, மணியம்மையார் எழுதி வைத்திருந்த கடிதத்தின்படி, ஒரே மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திராவிடர் கழகத்திற்கு இனித் தலைவர் கிடையாது என்றும், முடிவெடுக்கப்பட்டது. பொருளாளராகத் தஞ்சை கா.மா. குப்புசாமி, பிரச்சாரச் செயலாளராகத் திருச்சி என். செல்வேந்திரன், விவசாயப் பிரிவுச் செயலாளராக ஏ.எம். ஜோசப், அமைப்புச் செயலாளராகக் கள்ளக்குறிச்சி கோ. சாமிதுறை எம்.ஏ.பி.எல். தலைமைக் கழகச் செயலாளராக எஸ். துரைசாமி பி.ஏ.பி.எல்., இளைஞர் பிரிவுச் செயலாளராகக் கோவை கு.இராமகிருஷ்ணன் ஆகியோர் செயல்படுகின்றனர். சுயமரியாதை இயக்கப் பொன் விழாவுக்குப் பெரியார் இல்லாமை; பெரியார் நூற்றாண்டு விழாவுக்கும் மணியம்மையார் இல்லாமை; எனினும் பெரியார் தந்த சுயமரியாதைச் சுடர், பகுத்தறிவு ஒளி விளக்கு ஓயாமல் எரிந்து வெளிச்சத்தந்து வருகின்றது.

பெரியார் தொடங்கி நடத்திய பிரச்சாரப் பயிற்சி வகுப்புகள் திராவிடர் கழகத்தாரால் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. "விடுதலை", "உண்மை ", "The Modem Rationalist" போன்ற பத்திரிகைகள் - நூல்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. சுயமரியாதைப் பிரச்சார டிரஸ்டின் தலைவராக சிவகங்கை சண்முகநாதனும், செயலாளராக வீரமணியும் உள்ளனர்.

இன்றையத் தமிழ் நாடு அரசும் பெரியார் நூற்றாண்டில் பல