பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/690

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

689


ஆக்கபூர்வமான செயல் திட்டங்களை அறிவித்தது. பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்த முறை அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. அரசாணை ஒன்றின் வாயிலாக கோவை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, ஈரோடு தலைநகராகக் கொண்ட பெரியார் மாவட்டம் அமைக்கப்பட்டுள்ளது. பெரியார் பல்கலைக் கழகம் ஒன்று கோவையில் அமைக்கப்பட இருக்கிறது. பெரியார் புரட்சி மொழிகள் நூல் வெளி வந்துள்ளது. பெரியார் வாழ்க்கை வரலாறும், படக்கதையும் நூல் வடிவில் தயாராகி வருகின்றன. பெரியார் பொன் மொழிகள் கல்லில் வடிக்கப்பட்டுப் பேரூர்களில் நிறுவப்பட இருக்கின்றன. பெரிய திட்டமாகப் பெரியார் நினைவகம் ஒன்று நிறுவப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது மாவட்டந்தோறம் பெரியார் நூற்றாண்டு விழா. அரசு விழாக்களாக, ஆடம்பரமாக நடத்தப் பெற்றன!

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் திருச்சியில் ஆற்றிவரும் கல்விப் பணிகள்:

1. பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் 2. நாகம்மையார் ஆசிரியைப் பயிற்சி நிறுவனம் 3. பெரியார் மணியம்மை பெண்கள் மேல் நிலைப்பள்ளி 4. பெரியார் நடுநிலைப் பள்ளி 5. நாகம்மையார் குழந்தைகள் இல்லம். 6. பெரியார் மணியம்மை குழந்தைகள் காப்பகம். 7. தந்தை பெரியார் நூற்றாண்டு நர்சரி பள்ளி. 8. ரங்கம்மாள் சிதம்பரம் தையல் பயிற்சி நிலையம். 9. பெரியார் மணியம்மை மன்றம் ஆகியவற்றை நிறுவி நிருவகித்து வருவதாகும்.

நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திலும், பெரியார் மணியம்மை குழந்தைகள் காப்பகத்திலும் இப்போது சுமார் 300 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் அனைவர்க்கும் வயிறார உணவு, மானமார உடை, அறிவாரக்கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள பிள்ளைகளில் 7 பேர் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பித்ததால், அவர்கள் ஆங்கிலப் போதனைப் பள்ளிகளில் (English medium schools) சேர்க்கப்பட்டுக், கட்டணம் செலுத்தி, ஆங்கில மூலமான கல்வி வழங்கப்படுகிறது. ஓரளவு படித்துவிட்ட பெண்கள், அல்லது பாதியில் படிப்பை விட்டு விட்ட வளர்ந்த பெண்கள், அங்கேயே பணியாளர்களாகவும், சமையல்காரர்களாகவும் நியமிக்கப்பட்டு, அவர்கள் சம்பளம் முழுவதும் அவரவர்கள் பெயர்களில் வங்கிகளில் அப்படியே சேமித்து வைக்கப்படுகின்றது. 25 பெண்களுக்குத் திருமகள் திருமணத்திட்டம் மூலமாகவும் பணம் சேமிக்கப்படுகின்றது வங்கியில்,

பெண்களுக்குத் தையல் பயிற்சி வகுப்புகளும், முதியோர் இல்லம் ஒன்றும் அண்மையில் துவங்கப்பட இருக்கின்றன. சில