பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/698

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

697


முன்பே அறிமுகமானவர்களாக இருப்பின், அவர்கள் பெற்றோர், குடும்பத்தார், சுற்றத்தார், மற்றும் ஊரார் எல்லாரையும் நினைவு கூர்ந்து நலம் விசாரிப்பார் பெரியார்.

பதவியிலிருப்போரை நாம் மதித்து நடந்தால்தான் அவர்களை மக்கள் மதிப்பார்கள் என்று கருதி, அய்யா வாங்க என்று பணிவோடு பேகவார் பெரியார். பெரியவர் என்ன சொன்னார். அய்யா எதாவது பேசினாரா?' என்று, அமைச்சர்களைப் பற்றிப் பேசும்போது, அவர்கள் வயது பற்றிக் கருதாமல், பதவி பற்றிக் கருதி, அவர்களில்லாத நேரத்திலும் மரியானதயோடு விசாரிப்பார். குன்றக்குடி அடிகளாரிடம் 1953-ஆம் ஆண்டு முதல் பெரியாருக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. கொள்கை, நடைமுறைகளில் இருவரும் இரு வேறு துருவங்களாயினும், இருவரது இலட்சியமும் ஒன்றேயாதலின் அன்போடு பழகி வந்தனர். பெரியாரை விட அடிகளார் 45 வயது இளையவர், எனினும், அடிகளாரைப் பற்றிக் குறிப்பிடும்போது, 'மகா சந்நிதானம் சுவாமி அவர்களைப் பிரார்த்தித்துத் கொள்கிறேன்' என்று தான் பெரியார் சொல்லுவார்.

யாராவது வந்திருக்கும் போது பெரியார் தமக்கு அருகிலுள்ள ஒரு பத்திரிகையைப் படிக்க ஆரம்பித்து விட்டால், அதிலிருந்தே சாடை புரிந்து கொள்ள வேண்டும்; போகச் சொல்கிறார் என்று! மேலும், வருபவர் பெரியாரை முகத்துக்கு நேரே ஏதாவது கூறிப் புகழத் தொடங்கினால், அதனால் மயங்கி விடமாட்டார்; ஆனால், ஆள் ஏதோ ஏமாற்றப் பார்க்கிறார் என்று எச்சரிக்கை ஆகிவிடுவார்.!

சாப்பாட்டு நேரத்தில் விருந்தினர் வந்து விட்டால் பெரியார் மிகவும் மகிழ்ச்சி கொள்வார். பொதுவாகவே, மற்ற நேரங்களை விடக் குதூகலத்துடன் பெரியாரைக் காணக் கூடிய வேளையே, உணவு கொள்ளும் வேளைதான்! “அம்மா!” என்று அழைத்து - நாகம்மையார் காலத்திலும் சரி, மணியம்மையார் காலத்திலும் சரி - அவர்களுக்கு உடனே உணவு பரிமாறச் சொல்வார். தலைவர்கள் வீட்டில் நண்பர்களையோ, தொண்டர்களையோ, அலுவலகப் பணியாளர்களையோ சாப்பிடச் சொல்லும் பழக்கம் அந்தக் காலத்தில் பெரியாரிடம் மட்டுமே இருந்தது!

சாப்பிடுவோரின் உண்கலத்தை நன்கு கவனித்து, அவர் எதை விரும்பிச் சாப்பிடுகிறாரோ அதை மீண்டும் பரிமாறச் செய்வார் பெரியார். இறுதிவரை அவர் எதையும் மிச்சம் வைக்காமல் சாப்பிடுகின்றாரா என்றும் கவனிப்பார். கலத்தில் ஏதாவது விட்டுச்சென்றால், ‘பண்டத்தைப் பாழாக்கலாமா?’ என்று மிகவும் கோபித்துக் கொள்வார். அவருடைய பழக்கமே, தமது உண்கலத்தில் பரிமாறப்பட்ட உணவை மீதியாக்காமல் சாப்பிட்டு, அஜீர்ணத்தால் அவதிப்படுவது தானே! நேற்று ஒரு பண்டத்தைச் சாப்பிட்டு, அது செரிக்காமல் தொந்தரவு