பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

111


போராட்டம் வலுத்தது. மக்கள் ஆதரவு பெருகியது. மன்னர் என்ன செய்யலாம் என்று யோசித்தார். இறுதியில் -

அரிசனங்கள் கோவிலுக்குள் செல்லலாம் - என்று ஆணை பிறப்பித்தார்.

முதல் அரிசன ஆலயப் பிரவேசம் நடந்த ஊர் வைக்கம் என்ற புகழ் பெற்றது.

முதல் ஆலயப் பிரவேசத்தின் வெற்றிக்குக் காரணமாயிருந்த ஈ.வெ.ரா.வை மக்கள் 'வைக்கம் வீரர்' என்று பெருமையாக புகழ்ந்தார்கள்.

வைக்கத்தில் நடைபெற்ற இந்த முதல் ஆலயப்பிரவேச வெற்றியைத் தொடர்ந்து கேரளத்து ஆலயங்களிலெல்லாம் ஆலயப் பிரவேசம் நடைபெற்றது.

பிறகு, இந்தியா முழுதும் இந்தச் செய்தி பரவியது. ஈ.வெ.ரா.வை முன் மாதிரியாகக் கொண்டு அம்பேத்கர் உட்பட பல தலைவர்கள், வட இந்தியாவில் போராட்டங்கள் நடத்தி வெற்றி பெற்றார்கள்.


22. படிக்காத மேதை பத்திரிகை ஆசிரியரானார்

"மக்களின் மூட நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டுமென்பதிலும், மக்களைப் பகுத்தறிவுவாதிகளாக ஆக்க வேண்டு மென்பதிலும் எனக்கு, 1925-ம் ஆண்டு முதலே உறுதியான எண்ணமும், ஆசையும் உண்டு."

- தந்தை பெரியார்