பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

113


1942-ல் தமிழ்நாட்டு காங்கிரஸ் இயக்கத்தின் செயலாளராகப் பதவியில் இருந்த ஈ.வெ.ரா. ஒரு நாள் சேரன் மாதேவி குருகுலத்தைப் பார்வையிடச் சென்றார்.

அங்கு, பார்ப்பனச் சிறுவர்களுக்கு தனி இடம், தனி உணவுக்கூடம்; மற்ற சிறுவர்களுக்குத் தனி இடம், தனி உணவுக்கூடம் என்று பிரித்து வைக்கப்பட்டிருந்தது.

இதைக் கண்ட ஈ.வெ.ரா. திடுக்கிட்டுப் போனார்.

"சிறுவர்கள் உள்ள குருகுலத்தில் இப்படி சாதிப் பிரிவினையை வளர்க்கலாமா? இது சிறுவர்கள் மனதில் ஒற்றுமை உணர்வை கெடுத்து; வேற்றுமையை வளர்க் காதா?” என்று வ.வே.சு ஐயரிடம் ஈ.வெ.ரா. கேட்டார்.

உடனே வ.வே.சு. ஐயர் "என் தலைமையில் நடத்தப்படும் குருகுலம் இப்படித்தான் நடக்கும்” என்று ஆணவத்தோடு கூறிவிட்டார்.

ஈ.வெ.ரா. இந்தக் கொடுமையை, திரு.வி.க., வரத ராஜுலு நாயுடு போன்ற பெரியோர் நேரில் பார்க்கட்டும் என்று அவர்களை அழைத்து வந்து காட்டினார். அவர்கள் மனம் கொதித்தனர். கேட்டதற்கு, அவர்களிடமும் வ.வே.சு. ஐயர் அதே பதிலைத்தான் கூறினார்.

உடனே குருகுலத்திற்கு காங்கிரஸ் வழங்கும் நிதி உதவியை நிறுத்துமாறு உத்தரவிட்டனர்.

குருகுலத்தின் செயல் முறையைக் கண்டித்து ஈ.வெ.ரா. தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் செய்து போராட்டம் நடத்தினார்.