பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

தந்தை பெரியார்


கணவன் செய்யும் காரியங்கள் அனைத்திலும் தோள் கொடுத்து; கணவரது சுக, துக்கங்கள் அனைத்திலும் சமபங்கேற்று வாழ்ந்து காட்டிய நாகம்மையார் உடல் நலமின்றி படுத்த படுக்கையாகக் கிடந்தார்.

மனைவியின் அருகிலிருந்து கவனித்து அவளுக்குத் தைரியமூட்டி, ஆறுதல் கூறவேண்டிய ஈ.வெ.ரா அதைப் பற்றிச் சிந்தித்தாரில்லை.

தான், தனது தொண்டு - அதுவே பெரிதென்றெண்ணி, பொதுக் கூட்டங்களில் உரையாற்றச்சுற்றுப் பயணம் சென்று விட்டார்.

நாளுக்கு நாள் நாகம்மையார் உடல்நிலை மோசமடைந்து கொண்டே வந்தது.

வைத்தியம் செய்த மருத்துவர்கள் இனிப் பிழைப்பது அரிது என்று கூறினார்கள்.

அருகில் இருந்து கவனித்துக் கொள்ள எத்தனையோ பேர் இருந்தாலும்; நாகம்மையாரின் தளர்ந்த விழிகள், நாற்புறமும் கணவரைத் தேடித் துழாவின.

இத்தருணத்தில் கூடத்தன் கணவர் அருகில் இல்லாமற் போனது நாகம்மையாரின் மெல்லிய மனத்தை மிகவும் வருத்தியது.

வந்துவிடுவார்... வந்து விடுவார் என்கிற நம்பிக்கை வரவர அவரது உள்ளத்தில் தளர்ந்து கொண்டே வந்தது.

ஈ.வெ.ராவோ -

திருப்பத்துரில் நடக்கும் மகாநாட்டில்; ஈ.வெ.ரா பலத்த கைதட்டல்களுக்கிடையே பேசிக் கொண்டிருந்தார்.