பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

129


1937 - ஆம் ஆண்டு பெரியாரின் ஆதரவு பெற்ற நீதிக்கட்சி தோற்றது. காங்கிரஸ் வெற்றி பெற்றது.

காங்கிரஸ் மந்திரிசபையின் முதல் அமைச்சராக சி. இராசகோபாலாச்சாரியார் பதவி வகித்தார்.

தமிழ் நாட்டுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கட்டாயமாக இந்தி படிக்க வேண்டும் என்று இராசகோபாலாச்சாரி திட்டம் கொண்டு வந்தார்.

ஈ.வெ.ரா இந்தியைத் தமிழ்ப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்குவதை கண்டித்து எதிர்த்தார். தனது 'குடியரசு', 'விடுதலை' இதழ்களில், விமர்சனம் எழுதினார். பொதுக் கூட்டங்களில் இந்தித் திணிப்பை எதிர்த்துப் பேசினார்.

1937 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் காஞ்சியில் இந்தி எதிர்ப்பு மகாநாடு நடந்தது. இதில் அறிஞர் அண்ணாவும், பெரியாருடன் சேர்ந்தார். ஈ.வெ.ராவும், அண்ணாவும் காரசாரமாகப் பேசினார்கள். முதல் அமைச்சர் வீடு முன்பு மறியல் போராட்டம் நடந்தது. அறிஞர் அண்ணா கைதாகி சிறையில் அடைக்கப் பட்டார்.

இந்தி எதிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து எழுதும் விடுதலைப் பத்திரிகையின் ஆசிரியர் ஈ.வெ.ரா; அச்சிடும் ஈ.வெ. கிருஷ்ணசாமி இருவர் மீதும் அரசாங்கம் வழக்குத் தொடர்ந்தது.

இருவருக்கும் ஆறுமாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் பெரியாரை அண்ணா, மகிழ்வுடன் வரவேற்றார். இதனால் நாட்டில், கிளர்ச்சியும் மறியலும் அதிகரித்தது.