பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

தந்தை பெரியார்


பெரியார் பம்பாயை விட்டு சென்னை வந்த பிறகு ஒரு மாறுதல் ஏற்பட்டது.

"இந்தி கட்டாயப் பாடமில்லை. இந்தியை மாணவர்கள் விரும்பினால் படிக்கலாம். அது விருப்பப் பாடம்" என்று நேருஜி கூறினார். சென்னை மாகாணத்தை அப்போது ஆண்டுவந்த அட்வைசர் ஆட்சியினர் இதை அறிவித்திருந்தனர்.

'இந்த வெற்றி, இந்தி எதிர்ப்பு இயக்கத்திற்குக் கிடைத்த வெற்றி; அந்த வெற்றிக்கு உரியவர் பெரியார்' தான் என்று அனைத்துக் கட்சிகளும் பாராட்டிப் புகழ்ந்தன.

பெரியாருக்குப் போராட்டங்களில் இல்லை என்றால், ஒருநாள் கூட சுவையாக இருக்காது.

இந்தி எதிர்ப்பை அடுத்து; ரயில் நிலையங்களிலுள்ள உணவகங்களில், பிராமணருக்கென்று தனி இடம் ஒதுக் கப்பட்டிருந்தது.

இதை ஆட்சேபித்து பெரியார் ரயில்வே நிர்வாகத்திடம் போராட்டம் நடத்தினார். பெயர்ப் பலகைகளில் இருந்த இந்தி எழுத்துக்களை கழகத் தொண்டர்கள் அழித்தனர். இறுதியில் -

1941-ம் ஆண்டு மார்ச் மாதம் 21-ம் நாள், பெரியார் விருப்பப்படியே இரயில்வே உணவு விடுதிகளில், சாதி பேதம் நீக்கப்பட்டு, பொது உணவு விடுதியாக மாறியது.