பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

141


அறிஞர் அண்ணா அதிர்ந்து போனார்.

- 'எண்ணற்ற உயிர்த்தியாகங்களும், உண்ணாவிரதங்களும் இருந்து - கத்தியின்றி, ரத்தமின்றிக் கிடைக்கப்பெற்ற பொன்னான சுதந்திரத்தை, தந்தை பெரியார் ஏன் துக்க நாள் என்கிறார்?' - அண்ணாவின் சிந்தனையில் பெரியாரைப் பற்றிய முதல் வருத்தம் எழுந்தது.

தனக்குச் சரியென்று பட்டதைத் துணிந்து கூற, எவ்வளவு தைரியமும், மனஉறுதியும் வேண்டும்!

அதுதான், தந்தை பெரியாரின் இயல்பான குணம்.

காங்கிரசின் மேல் மோகம் கொண்டு; காங்கிரசு கட்சிக்காக அல்லும் பகலும் உழைத்துத் தன் அளவற்ற சொத்துக்களைத் தியாகம் செய்தவர் பெரியார்.

காங்கிரசின் கொள்கையைத் தென்னாட்டில் பரப்ப முழு ஒத்துழைப்பையும்; அயராத தன் உடலுழைப்பையும் அளித்தவர் பெரியார்.

பெரியாரைப் படிப்பவர்களுக்குப் புரியும்; அவரது கோபமெல்லாம் -

சுதந்திரத்தின் மீது அல்ல; அதற்குச் சொந்தம் கொண்டாடும் காங்கிரசு மீதுதான் என்று.

தான் மனமுவந்து நாடிச் சேர்ந்த காங்கிரசு கட்சியில், சாதி மனப்பான்மை கோலாச்சியதைப் பெரியாரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. மனம் புழுங்கினார்.

குழந்தைகளிடமும் சாதியைப் புகுத்திய சேரன்மாதேவி குருகுல சம்பவத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தார்.