பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

தந்தை பெரியார்


மாநாட்டில் கலந்து கொண்ட பெரியார், ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தி அனைவரையும் கவர்ந்தார்.

வட இந்தியச் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பெரியார் தமிழகம் திரும்பினார்.

தனது புதிய கட்சிக்கு ஒரு கொடியும், கட்சியின் தொண்டர்களுக்கு ஓர் புதிய உடையும் உருவாயிற்று.

திராவிடர் கழகம் கருஞ்சட்டைப் படையை ஏற்படுத்த வேண்டும் என்கிற ஒரு தீர்மானம் நிறைவேறியது.

அதன்படி 1945 -ம் ஆண்டு டிசம்பர் 22ந் தேதி இப்படை அமைக்கப்பட்டது.

1946-ம் ஆண்டு மதுரையில் கருஞ்சட்டைப் படையின் முதல் மகாநாடு நடந்தது.

கருப்புக் கொடியின் நடுவே சிவப்பு வட்டம் பொறித்த கொடியுடனும் -

கருப்பு வேட்டி, கருப்புச் சட்டை அணிந்த தொண்டர் படையுடனும் மதுரை மாநாடு கோலாகலமாக நடைபெற்றது.

1947 -ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் நாள் இந்தியா சுதந்திரமடைந்தது. அந்தப் பொன்னான நாளை இந்தியா விமரிசையாகக் கொண்டாடியது.

பெரியார் அந்த நாளை -

"இது சுதந்திர நாள் அல்ல; துக்க நாள்" என்று அறிக்கை விட்டார்.