பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

157


காங்கிரசின் வீழ்ச்சிக்கு நாட்டில் நிலவிய கடுமையான அரிசிப் பிரச்சினையோடு இந்தியும் சேர்ந்து முக்கிய காரணங்களாக விளங்கின.

எல்லையில் எழுந்த சீனப்போரை அடக்கிய மத்தியஅரசு; தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போரை சமாளிக்க முடியாமல் திணறியது.


36. அறிஞர் அண்ணா
அரியாசனம் ஏறினார்

"பிறப்பதும் சாவதும் இயற்கை. ஆனால் மக்கள் பாராட்டுதலுக்கு உகந்த வகையில் வாழ்தல் வேண்டும். மக்கள் ஒருவரைச் சும்மா போற்ற மட்டார்கள்.

நாம் மற்ற மக்களும் போற்றும்படியான வகையில் காரிய மாற்ற வேண்டும்."

- தந்தை பெரியார்

தமிழகத்தில் 1967-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது.

மிகப் பெரிய கட்சியான காங்கிரசை எதிர்த்து; ஒரு புதிய விடியலுக்கான பாதையை வழி வகுத்த தேர்தல் அது.

பொதுத் தேர்தலில், காங்கிரசையும் காமராசரையும் பெரியார் ஆதரித்தார்.

அதோடு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராக அதை எதிர்த்துக் கடுமையாகப் பிரசாரம் செய்தார். அண்ணாவை ஆதரிக்கக் கூடாது என்ப