பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கியது. வெங்கடப்ப நாயக்கரின் உழைப்பும், நாணயமும் தொழில் நேர்மையும் மேலும் அவரை உயர்த்தியது.

கோயமுத்துார் மாவட்டத்திலுள்ள பெரு வணிகராகவும் முக்கிய செல்வந்தர்களில் ஒருவராகவும் வெங்கடப்ப நாயக்கர் விளங்கினார்.

செல்வம் உயர உயர் அவரிடமுள்ளதரும சிந்தனையும், பக்தி மார்க்கமும் அதிகரித்துக் கொண்டே வந்தது.


4. தீராத விளையாட்டுப் பிள்ளை

"தொட்டதற்கெல்லாம் 'கடவுள் செயல்', 'கடவுள் செயல்' என்று சமாதானம் சொல்லுகின்றவர்கள், தங்கள் தப்பிதத்தின் காரணத்தை உணராதவர்கள்; அல்லது தங்கள் தவறுகளை உணர்ந்து அதிலிருந்து தப்பித்துக் கொள்ள முயற்சிக்கிறவர்கள் ஆவார்கள்.

- தந்தை பெரியார்

ஒரு மனிதன், தன் அயராத உழைப்பினால் அடைந்த வெற்றியாகத்தான் நம்புகிறான். வெங்கடப்ப நாயக்கரும் அப்படித்தான் நம்பினார்.

"ஏழையாயிருந்த தாங்கள் இத்தனை பெரிய செல்வந்தரானது; கடவுளின் கருணையினால் தான்" என்று கணவரைப் போலவே சின்னத்தாயம்மையாரும் கருதினார்.

இயற்கையிலேயே தெய்வபக்தி மிகுந்த வெங்கடப்ப நாயக்கர், தன் வீட்டிலுள்ள பெரிய கூடத்தில் நாள்