பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

தந்தை பெரியார்


வேலை செய்யறாரு. சின்ன எசமான் ரொம்ப நல்லவரு அம்மா..."

காளியின் பேச்சைக் கேட்டு அவன் தாய் பதறிப் போனாள்.

"ஐயோ... பெரியநாயக்கரய்யா வீட்டுப் பிள்ளையா நீங்க?" என்று அலறியவள்

"சின்ன எசமான் நீங்க இந்தத் தெருவுக்குள்ளாறெ, எங்க வூட்டுக்கெல்லாம் வரலாமுங்களா? என் மவன் கூட நீங்கள்ளாம் சேரலாமுங்களா!" என்றாள் மிகவும் பயந்தபடி.

"இதில் என்ன அம்மா தப்பு இருக்கு? காளி, என்னோட சினேகிதன். நான் வலுவிலே, அவனோடு பழகினதுக்கு, சினேகமா இருந்ததுக்கு உங்க பிள்ளையைப் போட்டு ஏன் இப்படி அடிக்கறீங்க? அவன் மேலே என்னதப்பு இருக்கு?" என்று இராமசாமி கேட்டார்.

"எசமான்... நீங்க சின்னப் புள்ளே... உங்களுக்கு இந்த விசயமெல்லாம் புரியாது. நாங்க கீழ்ச்சாதிக்காரங்க. எங்க இடத்துக்கெல்லாம் நீங்க வரக்கூடாது. பெரிய எசமானுக்குத் தெரிஞ்சா எங்களைக் கொன்று போட்டுருவாரு.”

"நீங்க எல்லாம் கீழ்சாதின்னு யாரு சொன்னாங்க? அதெல்லாம் சுத்தப் பொய் நம்பாதீங்க.”

காளியின் அம்மா மெல்லச் சிரித்தாள்.

"எசமான்! அதை இந்த ஊரு சொல்லுது; உலகம் சொல்லுது. எல்லாத்துக்கும் மேலே காலங்காலமா,