பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

57


தீண்டப்படாதவன்னு வாழற எங்க பொறப்பைப் பத்தி எங்களுக்குத் தெரியாதா? வாதம் பேசினாநாங்க வாழ முடியாது.

எசமான், சீக்கிரமா இங்கிருந்து போயிடுங்க; இனிமே என் மவன் கூடவும் சேராதீங்க. அவனை விட்டுருங்க. யாராவது உங்களோடு பார்த்துட்டா, காளியோட அப்பாவுக்குத்தான் கஷ்டம் வரும்." இதையெல்லாம் கூறும்போது, பயத்தால், காளியின் உடல் நடுங்கியது. மகனைக் கட்டிக்கொண்டு அழுதாள்.

அதற்கு மேலும் அங்கிருந்து அவர்களுக்குக் கஷ்டத்தைக் கொடுக்க இராமசாமி விரும்பவில்லை.

“சரி... ரொம்பத் தாகமா இருக்கு... கொஞ்சம் தண்ணி குடுங்க... குடிச்சுட்டுப் போகிறேன்," என்றார்.

இதைக் கேட்டதும் காளியின் அம்மா, தன் இரு கைகளாலும் வாயைப் பொத்தியபடி,

"ஐயோ...தண்ணியா கேக்கறீங்க?" என்றாள். ஏதோ கேட்கக் கூடாததைக் கேட்டு விட்டதைப் போல.

"ஏன்? தண்ணி இல்லியா?" இராமசாமி தயங்கியபடிக் கேட்டார்.

காளியின் அம்மாவுக்கு அழுகையே வந்துவிடும் போலிருந்தது.

இராமசாமியைப் பரிதாபமாகப் பார்த்தபடிக் கூறினாள்: "சின்ன எசமான்... வீட்டிலே பானை நிறையத் தண்ணி இருக்கு; ஆனாலும் தவிச்ச வாய்க்கு உங்களப்