பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

87


எல்லூர் கடை வீதியைப் பார்த்தபோது; ஈரோடு மண்டிக் கடையைப் பார்ப்பது போலவே இருந்தது. பலதரப்பட்ட நவதானியக் கடைகளையும், வரிசையான அரிசி மண்டிக் கடைகளையும் ஜனங்களையும் பார்த்துக் கொண்டு வந்தபோது, மலரும் நினைவுகளாக அவருள் வியாபார எண்ணம் தலை தூக்கியது.

எதிரில் இருந்த ஓர் எள்ளுவிற்கும் கடைக்குச் சென்றார். அந்த ஊரின் விலைவாசியை அறிந்து கொள்ளும் நோக்கத்துடன் விலை கேட்டார்.

அந்தக் கடையின் சொந்தக்காரரான ஸ்ரீராமுலு விலை சொன்னார். அவருக்கு இராமசாமியை எங்கோ பார்த்த ஞாபகம் இருந்தது. ஆனால் சட்டென்று நினைவிற்கு வரவில்லை.

விலை கேட்ட இராமசாமி கையில் எடுத்துப்பார்த்த எள்ளை மூட்டையில் போட்டு விட்டுச் சிரித்தபடி மேலே சென்று விட்டார்.

இது ஸ்ரீராமுலுவுக்கு என்னமோ போலிருந்தது. உடன் சென்று கொண்டிருந்த சுப்பிரமணியப் பிள்ளையிடம், "இவர் யார்?' என்று விசாரித்தார்.

சுப்பிரமணியப் பிள்ளை விவரமாக எடுத்துக் கூறியதும், "நம்ம ஈரோட்டு நாயக்கர் மகனா?” என்று கூறி, இராமசாமியை வியப்புடன் பார்த்தார்.

இராமசாமி தன் கடையில் சரக்கு வாங்காமற் போனது ஸ்ரீராமுலுவின் மனதிற்கு கஷ்டமாயிருந்தது.

அன்றிரவே ஈரோடு வெங்கடப்ப நாயக்கருக்கு ஒரு கடிதம் எழுதிப் போட்டு விட்டார். அதில் -