பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

95



வட்டியும் முதலுமாக மக்களிடமிருந்தே கறப்பார்கள். மக்கள் சேவைக்கென்று மனப்பூர்வமாகப் பதவி ஏற்பவர்களே உண்மையாக மக்களுக்குத் தொண்டாற்றுவார்கள்.

ஈ.வெ.ரா. இரண்டாவது வகையைச் சேர்ந்தவர். பதவிக்காக என்றுமே அவர் ஆசைப்பட்டதில்லை. ஆனால் தேடி வந்த நகர சபைத் தலைவர் பதவியைத் திறம்பட நிர்வகித்தார்.

இரவும் பகலும் நகர மக்களின் நலம் பற்றியே சிந்தித்தார். மக்களின் குறைகளை நேரில் கண்டறிந்து அவ்வப்போது ஆவன செய்தார். இதனால் அவரது பதவிக் காலத்தில் ஒரு பெரும் சோதனை ஏற்பட்டது.

சிறந்த வியாபாரத் தலமாக விளங்கிய ஈரோட்டுக் கடைத்தெரு மிகவும் குறுகலாகவும் நெருக்கமாகவும் இருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் கஷ்டப்பட்டார்கள். இதற்கு என்ன வழி செய்யலாம் என்று ஈ.வெ.ரா. தீவிரமாகச் சிந்தித்தார்.

கடைத்தெருவிலுள்ள கடைகளில் பாதிக்கு மேல் இடித்தாலன்றி; வீதியை விரிவுபடுத்த முடியாது என்று உணர்ந்தார்.

அப்படிச் செய்ய முனைந்தால், பழைய கடைக்காரர்களும் பெரும் பணக்காரர்களும் சும்மா இருக்க மாட்டார்கள். தன்னிடம் சண்டைக்கு வருவார்கள் அல்லது கிளர்ச்சி செய்வார்கள்.

இதைத் தவிர்க்க ஈ.வே.ரா. உடனே நகரசபை உறுப்பினர்களின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்.