பக்கம்:தனி வீடு.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வண்டும் மலரும் 91

உலகில் உள்ள சிற்றின்பத்தை கினைந்து தன் வாழ்க் கைத் தொழில் முழுவதையும் அதற்காக அமைத்துக் கொண்டு வாழும் இயல்புள்ள மக்களின் மனத்தை வண் டாக வைத்து, இறைவனுடைய திருவடியைத் தியானம் செயது இன்பத்தைப் பெறவேண்டும் என்று சொல்லும் உபதேசமே மணிவாசகர் பாட்டு.

2

அருணகிரி நாதரும் தம்முடைய புத்தியாகிய வண்டு இறைவனுடைய பாதாம்புயத்தில் சென்று சேரவேண்டு மென்று நினைக்கிருர்.

புத்தியை வாங்கிகின் பாதாம் புயத்தில் புகட்டி,அன்பாய் முத்தியை வாங்க அறிகின்றிலேன்.

3. வேற்றுமையில் ஒற்றுமை

நம்முடைய மனத்தில் இறைவனுடைய பாதாம் புயத்தை வைத்துத் தியானம் பண்ணவேண்டும் என் பதையே அப்படிச் சொன்னர். எம்பெருமான் பல பல திருவுருவங்களிலே மக்களுக்கு அருள் செய்கிருன். அந்தத் திருவுருவங்களின் ஒற்றுமை வேற்றுமையையும், உயர்வு தாழ்வையும் அறியப் புகுந்து, இது உயர்ந்தது. இது தாழ்ந்தது என்று முடிவுகட்டும் அறிவு நமக்கு இல்லை, தோற்றத்தில் பல பல வேற்றுமைகள் இருந்தாலும் அத் தன வேற்றுமைகளுக்குமிடையே ஓர் ஒற்றுமை இருக் கிறது. திருவடிகளைப் பற்றும் இயல்பு வந்தால் அந்த ஒற்றுமை தெளிவாகும். .

பல உருவம்

நம் நாட்டில் உள்ளவர்கள் ஓர் உருவத்தை மட்டும் கொண்டாடுவது இல்லை. பல பல மூர்த்திகளை வழிபடு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/101&oldid=575912" இலிருந்து மீள்விக்கப்பட்டது