பக்கம்:தனி வீடு.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 தனி வீடு ,

கிருர்கள். அந்தக் கடவுளுக்குப் பல விதமான உருவங்களே அமைத்திருக்கிருர்கள். எதைப் பார்த்தாலும் வேறுபாடு. முருகன் என்று சொன்னல் அவனுக்குப் பல பல உருவங்கள். மொட்டை அடித்த தலையும், இரண்டு கையும், ஒரு முகமும், கையில் தண்டமும் கொண்ட தண்டபாணியைப் பழனியில் கொண்டாடுகிருர்கள். இன்னும் சில இடங்களில் வள்ளி தேவசேன சமேதகை, மயில் வாகனத்தில் அமர்ந்து அருள் வழங்கும் உருவத்தில் வழிபடுகிருர்கள். பின்னும் சில இடங்களில் ஆறுமுகமும் பன்னிரண்டு கரங்களும் உடையவகை வைத்து வழிபடு கிருர்கள். இப்படி ஒரே தெய்வத்திற்குப் பல உருவங் களும், அவற்றுக்குப் பல மந்திர தந்திரங்களுமாக வைத்துக்கொண்டு வழிபடும் முறையைக் காண்கிருேம்.

திருவள்ளுவர் கருத்து

இவற்றில் பொதுவான பகுதி ஒன்றுமே இல்லையா என்று சிலர் கேட்பது உண்டு. இந்தக் கேள்வி மிகப் பழங்காலத்தில் திருவள்ளுவருக்கு எழுந்தது. அவர் உலகத்தில் பல பல வகையான வாழ்க்கை முறை இருந் , தாலும், பலவகை இயல்புள்ள மக்கள் இருந்தாலும், எல்லோருக்கும் பொதுவாக ஒரு நூல் இயற்ற வேண்டு மென்று விரும்பினர். எல்லாக் காலத்துக்கும், எல்லாச் சாதியினருக்கும், எல்லா காட்டவருக்கும் பொதுவான அந்த நூலின் தொடக்கத்தில், கடவுளை வழிபடவேண்டும் என்பதை வற்புறுத்தப் புகுந்தார்.

'அகரம் முதல எழுத்தெல்லாம்; ஆதி

பகவன் முதற்றே உலகு" என்று தொடங்கினர். இறைவனே வணங்கவேண்டு மென்று சொல்ல வந்தவர் அந்த இறைவனப்பற்றியும் தெரிவிக்க வேண்டும் அல்லவா? மனத்தாலும், வாக்கா லும், உடம்பாலும் வழிப்ாடு செய்ய வேண்டுமென்பதைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/102&oldid=575913" இலிருந்து மீள்விக்கப்பட்டது