பக்கம்:தனி வீடு.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 தனி வீடு

கின்றன. முகம் எப்படி இருக்கிறதோ அதற்கு ஏற்றபடி கரங்கள் இருக்கும். நான்கு முகத்திற்கு எட்டுக் கரங்கள், ஆறு முகத்திற்குப் பன்னிரண்டு கரங்கள், ஐந்து முகத் திற்குப் பத்துக் கரங்கள் என்ற வேறுபாடு உண்டு. இந்த வேறுபாடு அடிகளைப் பொறுத்த வரையில் இல்லை. முகமும், உடம்பும், திருத் தோள்களும் வெவ்வேருக இருந்தாலும் இறைவனுடைய வடிவங்கள் எல்லாவற்றுக் கும் பொதுவாக அமைந்தவை இரண்டு திருவடிகள்.

வேடிக்கையாகக் குழந்தைகளுக்குச் சில கணக்குக் கேள்விகளைப் போடுவது பெரியவர்கள் வழக்கம். அப்படி ஒரு குழந்தையிடம் போய், ஒரு முகத்திற்கு இரண்டு கை, இரண்டு கால் ஆறு முகத்திற்கு எத்தனை கைகள், எத்தனே கால்கள்?' என்று கேட்க, அந்தக் குழந்தை யோசிக்காமல் விடை சொன்னுல், :பன்னிரண்டு கைகள், பன்னிரண்டு கால்கள்' என்று சொல்லும், யோசித்துச் சொன்னல், :பன்னிரண்டு கைகள், இரண்டு கால்கள்' என்று சொல்லும். இங்கே பெருக்கல் வாய்பாட்டுக்கு வேலே இல்லை. எத்தனே முகங்களான லும், எத்தனே கரங்களானலும் அடிகள் மாத்திரம் இரண்டே -

திருவிடைக்கழிப் பின்னத்தமிழ்

. இந்தச் சந்தர்ப்பத்தில் எங்கள் ஆசிரியருக்கு ஆசிரியராகிய மகாவித்துவான் பூ மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்கள் திருவிடைக்கழிப் பிள்ளைத்தமிழில் பாடி இருக்கும் ஒரு பாட்டு கினேவுக்கு வருகிறது. திருவிடைக் கழி என்பது சோழநாட்டில் முருகன் எழுந்தருளியிருக்கும் திருத்தலங்களில் ஒன்று. திருவிடைக்கழி முருகன்மேல் மகாவித்துவான் அவர்கள் ஒரு பிள்ளைத்தமிழ் பாடினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/104&oldid=575915" இலிருந்து மீள்விக்கப்பட்டது