பக்கம்:தனி வீடு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வண்டும் மலரும் 97.

- கால்கள் எப்போதும் இரண்டாகவே அமைந்திருக்கின்றன. முகம் முதலியவற்றில் வேறுபாடு இருந்தாலும் திருத்தாள் தாமரை போல ஒரே மாதிரி இருக்கிறது. -

வள்ளுவர் கண்ட வழி

இந்த உண்மையை வள்ளுவர் உணர்ந்தார். காம் கடவுளுடைய உருவத்தைப் பற்றிச் சொல்லவேண்டும். ஆல்ை வேறுபாடுள்ள உருவங்களைச் சொல்லக்கூடாது. எல்லாவற்றுக்கும் பொதுவாக இருக்கும் பகுதியைச் சொன்னல் போதும் என்று எண்ணினர். அடியார் களுக்குப் புகல் இடமாக நிற்பது திருவடியே. திருவடி யைச் சொன்னலே ஆண்டவனின் உருவம் முழுவதையும் சொன்னதாக ஆகும். . . . . . . . . . . .

கோள் இல் பொறியிற் குணம்இலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தல்ை. . . . . என்ருர். அந்தத் திருவடியைச் சேர்ந்தவர்கள் பிறவிப் பெருங்கடலிலே நீந்துவர் என்றும் சொன்னர்.

அன்பர்களுக்குப் பற்றுக் கோடாக இருப்பவை ஆண்ட வனுடைய திருவடிகள். எம்பெருமான் திருவருள் நெறி யில் செல்பவரைத் தோளார், கையார் என்று சொல்லாமல் அடியார் என்று சொல்வதற்குக் காரணமே அவர்களுக்கு மற்றப் பகுதியைக் காட்டிலும் திருவடியில் கோக்கம் அதிகம் என்று காட்டுவதுதான். இறைவனுடைய பாதாம் புயத்தில் அடியார்களுடைய உள்ளமாகிய வண்டுகள் உலவும். அடியார்களுடைய உள்ளம் இறைவனுடைய திருவடியைப் பற்றிக்கொண்டால் அவர்களுக்கு வேண் டியன எல்லாம் கிடைக்கும். இந்த நுட்பத்தைத் தெரிந்து கொள்ளாமல் பலர் திண்டாடுகிரு.ர்கள். . . . . . .

இதனைப் பாரதத்தில் வருகின்ற வரலாறு ஒன்று தெரி விக்கிறது. - தனி -?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/107&oldid=575918" இலிருந்து மீள்விக்கப்பட்டது