பக்கம்:தனி வீடு.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர்கள் சொல்வதாக அந்தப் பெரும் புலவர் பாடியிருக் கிரு.ர்.

நையா நின்ற சிறுமருங்குல்

நங்கை உமையாள் பரமைெடும் நறுநீர்ப் பொய்கைத் தடங்கரைவாய் - கண்ணி முகமா றினுக்கேற்பக்

கையா றிரண்டு செய்ததுபோல் - காலா றிரண்டு புரியாமல்

கருதி இரண்டே புரிந்தனள் முற்

கடையேம் செய்த நல்வினையால் மெய்யா யிரண்டா யிருந்துமவை

விளக்கும் குறும்பு பொறுக்கரிதா விளைந்த தினியாம் செயலென்னே?

விதி தோறும் விடாதமர்ந்து செய்யாள் மகிழும் இடைக்கழிவாழ்

செல்வா! சிற்றில் சிதையேலே! சிந்திப் பவர்உள் ளுறமுதத் - தெளிவே! சிற்றில் சிதையேலே!" இந்தப் பாட்டில் முருகப் பெருமானுக்கு ஆறுமுகங் களும் அந்த முகங்களுக்கு ஏற்பப் பன்னிரண்டு திருக்கரங் களும் இருந்தாலும், பெருக்கல் வாய்பாட்டு முறையில் பன்னிரண்டு கால்கள் அமையவில்லை. இரண்டு கால்களே உள்ளன என்ற கருத்து அமைந்திருக்கிறது.

- - முகமாறினுக்கேற்பக் கையா றிரண்டு செய்ததுபோல் காலா றிரண்டு புரியாமல் - - கருதி இரண்டே புரிந்தனள்.' . . . .

இப்படித்தான், முகம் எப்படி இருந்தாலும், கைகள் எப்படி இருந்தாலும், இறைவனுடைய திருவுருவங்களில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/106&oldid=575917" இலிருந்து மீள்விக்கப்பட்டது