பக்கம்:தனி வீடு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனி வீடு

1 பேய் பிடித்த விடு

சி. காலத்திற்கு முன்னல் பத்திரிகையில் ஒரு செய்தி வந்தது. ஒரு வீட்டில் கொடியில் உலர்த்தி இருந்த ஆடைகள் திடீரென்று எரிவதாகவும், கொடி மட்டும் எரியாமல் இருப்பதாகவும், யாரோ சூன்யம் வைத்தமை யில்ை அப்படி நடக்கிறதாகவும் அந்தச் செய்தி சொல்லியது. பேய், பிசாசு, பூதம் ஆகியவை ஒரு வீட்டில் இருந்தால் அந்த வீட்டில் உற்பாதங்கள் கிகழும் என்று சொல்வார்கள். ஒருவனேப் பேய் பிடித்தால் அவன் எத்தனை சாப்பிட்டாலும் அவ்வளவும் ஒரு கொடியில் பஸ்மீகரம் ஆகிவிடும். வீட்டிலானலும் உடம்பிலான லும் பேயோ, பூதமோ புகுந்து கொண்டால் அங்கே கிகழ்கின்ற நிகழ்ச்சிகளுக்கும் அவற்றை உடையவர்களுக்கும் ஒரு சம்பந்தமும் இராது. அங்கே நிகழும் நிகழ்ச்சிகள் துன்பத் தைத் தருமே அல்லாமல் இன்பத்தைத் தருவது இல்லை.

இப்படி எங்கோ அருமையாக நடக்கும் நிகழ்ச்சியைக் காண்கிருேம். ஆல்ை ஒவ்வொரு நாளும் இத்தகைய நிகழ்ச்சி எல்லோரிடத்திலும் நடக்கிறது. அதை நாம் தெரிந்துகொள்வது இல்லை. எங்கேனும் அருமையாக ஒன்று நடந்தால் அதுதான் கண்ணில் படுகிறது; காதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/11&oldid=575822" இலிருந்து மீள்விக்கப்பட்டது