பக்கம்:தனி வீடு.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வண்டும். மலரும் 1 0 1

முன் சொன ைஎல்லாம்.கடந்தாலும் நடக்கலாம். என்ன நீ எப்படிக் கட்டுவாய்?' என்று கேட்டான். சகாதேவன் உடனே விடை சொன்னன். மற்ற எல்லாம் தெரிந்து கொண்ட மாதிரி உன்னை நீ தெரிந்து கொள்ளவில்லையே, கண்ணு! யசோதையால் உன்னேக் கட்டமுடியாமல் போயிற்று என்பதை யோசித்து இப்படிப் பேசுகின்ருய் போலும்! நீ கண்ணகை எழுந்தருளி இருக்கும் இந்த உருவம் மாத்திரம் அன்று. உன்னுடைய இயல்பான உருவத்தையும் எனக்குக் காட்டு. நான் கட்டிவிடுகிறேன்' என்ருன். கண்ணன் சகாதேவனுடைய மனவலிமையைத் தெரிந்து கொள்ளும் பொருட்டுப் பல பல வடிவங்களைக் கொண்டு கின்ருன், - r . "மாயவனும் அன்பன் மனமறிவான் கட்டுகளின்

ருய வடிவுபதி ஞரு யிரங்கொண்டான்.'

கண்ணபிரான் பல பல உருவங்களிலும் தோற்றம் அளித் தான். சகாதேவன் அந்த வடிவங்களே எல்லாம் கண்டு, *நாம் தெரியாமல் சொல்லிவிட்டோமே! எப்படிக் கட்டு வது?’ என்று மயங்கவில்லை.

- சகாதேவன் செயல்

ஆலமரம் நெடுந்துாரம் தழைத்துப் பரவிக் கிளை விட்டிருந்தாலும் அதன் அடிமரத்தில் கோடரியால் போட்டால் மரமே பட்டுவிடும். அப்படி அத்தனே உருவங் களுக்கும் மூலமாக உள்ள தோற்றம் எது என்பதைச் சகாதேவன் நன்கு உணர்ந்தவன். அதுமாத்திரம் அன்று; எங்கே கட்டவேண்டுமென்பதையும் தெரிந்துகொண்டிருந் தான். மூலமாகிய தோற்றத்தை உள்ளத்தில் வைத்து அந்தப் பெருமானுடைய திருவடிகளைத் தன்னுடைய கருத்தில்ை பிணைத்துவிட்டான்.

தூயவனும் மூலமாம் தோற்றமுணர்ந் தெவ்வுலகும்

தாய அடியிணைகள் தன் கருத்தி குற்பிணித்தான்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/111&oldid=575922" இலிருந்து மீள்விக்கப்பட்டது