பக்கம்:தனி வீடு.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.02 தனி வீடு

இப்போது கண்ணன் கட்டுண்டு கிடந்தான். மற்றப் பெரியவர்களுடைய தந்திரத்தினலே கட்டுப் படாத ஆண்டவன், யசோதை கட்டிய கயிற்றுக்கு அகப்படாத ஆயன், வேதங்களிலுைம் சாஸ்திரங்களிலுைம் காண முடியாத கண்ணன், இப்போது மிக எளிதில் சகாதேவனல் கட்டுண்டான். கண்ணனுக்கே வியப்பு உண்டாகிவிட்டது. நெடுநாள் காணமுடியாமல் கண்ட ஒருவர் தம்முடைய அன்பன இறுக்கிப் பிணித்து அணைத்துக் கொண்டால் அந்த அணைப்பு ஒரு வகையில் இன்பமாக இருக்கும்; மற்ருெரு வகையில் மூச்சுத் திணற அடிக்கும். இந்த கிலேயில் கண்ணபிரான் இருந்தான். சகாதேவா, என்னே அன்பினலே நன்கு அறிந்து எப்படிக் கட்டவேண்டு மென்ற உண்மையைத் தெரிந்து என்னுடைய காலைக் கட்டி விட்டாயே! நீ கட்டினது மிகவும் நல்லது. நீ நல்லவன். நான் இப்போது அஸ்தினபுரத்திற்குத் துது போக வேண்டும். கட்டின காலே விடு அப்பா' என்று கெஞ்சினன். - -

'அன்பாலின் றென்னை அறிந்தே பிணித்தமைகன்று என்பாதந் தன்னை இனிவிடுக என்று உரைப்ப.'

அவன் பெற்ற வரம்

சிகாதேவன் மிகச் சிறந்த தந்திரசாலி. கையில்ே அகப்பட்டுக்கொண்ட பொருளைப் பயன்படுத்தாமல் விடு வான? கண்ணு, இப்போது நீ எனக்கு ஒரு வரம் தர வேண்டும். பாரதப் போரில் எல்லோரையும் அழித்துப் பூபாரம் தீர்க்கத் திருவுள்ளம் கொண்டிருக்கிருய் என்று எனக்குத் தெரியும். இப்போது நான் கேட்கும் வரம் ஒன்று உண்டு. உன் திருவுள் ளக் கருத்தில் சற்றே நெகிழ்ச்சி கொள்ள வேண்டும். உன்னையே சரண் அடைந் திருக்கிற எங்கள் ஐந்து பேரை மாத்திரம் உன்னுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/112&oldid=575923" இலிருந்து மீள்விக்கப்பட்டது