பக்கம்:தனி வீடு.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வண்டும் மலரும் 1 03

கடைக்கண்ணுல் காப்பாற்றி அருளவேண்டும்' என்று வேண்டிக் கொண்டான். - -

வன்பா ரதப்போரில் வந்தடைந்தோம் ஐவரையும்

கின்பார்வை யால்காக்க வேண்டும் நெடுமாலே!"

யாருக்கும் கட்டுப்படாத கண்ணபிரான உள்ளத்தில் தோன்றிய மெய்யன்பினலே பிணைத்து அவன் திருவடி யைக் கட்டி, அந்தச் சமயத்தில் வரம் கேட்டு வாங்கிக் கொண்டான் சகாதேவன். பின்னல் கெளரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் பதினெட்டு நாள் பெரிய போர் நடந்தது. மிகக் கடுமையாக நடந்த அந்தப் போரில் ஒவ்வொருவருடைய வீரமும் வெளியாயிற்று. போர் நடந்து அதில் அருச்சுனன் முதலியவர்கள் தம்முடைய வீரத்தை வெளிப்படுத்த, அதனுல் பஞ்சபாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்தது என்றுதான் பாரதத்தைப் படிக்கை யில் தோன்றுகிறது. ஆனால் அந்தப் போர் நடப்பதற்கு முன்னலேயே பாரதப் போரின் முடிவு ஒரு சிறிய அறை யில் தீர்மானம் ஆயிற்று. கண்ணபிரானுடைய இரண்டு திருவடிகளைத் தன் கருத்தினலே பிணைத்த சகாதேவன் அந்தப் பெருமானிடம் கேட்டுக்கொண்ட வரந்தான் பாரதப் போரில் பஞ்சபாண்டவர்களுக்கு வெற்றியை வாங்கித் தந்தது. அவன் அப்போது விண்ணப்பித்த விண்ணப்பமே பிறகு போர்க்களத்தில் அருச்சுனனின் காண்டீபத்திற்கும், தருமனின் அறத்திற்கும் வலிம்ை தந்தது. திரைக்கு மறைவில் பச்சைப் பசுங்கொண்டலைச் சகாதேவன் பிணித்து அவன் திருவடியைப் பற்றிக் கொண்டு அன்பின் வலிமையைக் காட்டிய செயல்தான் அந்த வெற்றிக்கு மூலம். தூயவனகிய சகாதேவனுக்குத் தான் அந்தப் பெருமானுடைய மூலம் எங்கே இருக்கிற தென்று தெரிந்தது. எத்தனே ஆயிரம் திருவுருவங்கள் எடுத்தாலும் அவை எல்லாவற்றுக்கும் மூலமாக இருப்பன இரண்டு திருவடிகள் என்பதை ஞர்னியும், அன்பனுமான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/113&oldid=575924" இலிருந்து மீள்விக்கப்பட்டது