பக்கம்:தனி வீடு.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 0 6 தனி வீடு

யாகிவிடாமல் அவற்றைத் தனக்கு அடிமையாகக் கொண்டு ஒருமுகப்பட்டு நிற்கவேண்டும். இன்ப துன்பங்கள் என்ற வேறுபாடின்றி, மேடுபள்ளம் என்ற வேற்றுமை அல்லாத நிலையை அடையவேண்டும். அத்தகைய நிலையில் அவன் கின்ருல், பசை யாவும் அற்று கின்ருல், அப்போதே அவனுக்கு முத்தி சித்திக்கும். அந்த இடத்தில் வீடு கிடைக்கும். அந்த நிலையை, -

நன்ருய் ஞானம் கடந்துபோய்

நல்லிங் திரிய மெல்லாமீர்த்து ஒன்ருய்க் கிடந்த அரும்பெரும்பாழ்

உலப்பில் அதனை உணர்ந்துணர்ந்து சென்ருங் கின் பத்துன்பங்கள்

செற்றுக் களைந்து பசையற்ருல் அன்றே அப்போ தேவீடு;

அதுவே வீடு வீடாமே' என்று நம்மாழ்வார் சொல்கிருர். அற்றது பற்றெனில் உற்றது வீடு' என்றும் சொல்கிருர். முத்தி என்பது ஒரு நிலேயேயொழிய இடவகை அன்று. மனம் அழுக்கெல்லாம் போய்த் தானே முதலில் தூயதாகி அப்பால் தானே அழி கின்ற சமயத்தில் கிடைக்கின்ற இன்பநிலையே முத்தி.

இந்தப் பாட்டில், ஒரு பொருளைக் கொடுத்துவிட்டு ஒரு பொருளே வாங்கவேண்டுமென்று சொல்வது போல அருணகிரியார் முருகனிடம் விண்ணப்பித்துக் கொள் கிருர். இன்ன கடையில் இவ்வளவு பணத்தைக் கொடுத்து விட்டு இன்ன சரக்கை வாங்கிக்கொள்ளும் சக்தி எனக்கு இல்லையே!' என்று கூறுவது போலச் சொல்லி யிருக்கிரு.ர். .

அன்பும் அறிவும் 'உன்னுடைய பாதாம்புயத்திற்கு என்னுடைய

மனத்தை அனுப்பி அங்கே அன்பைக் கொடுத்து முத்தி என்ற பொருளே வாங்குவதற்கு நான் தெரிந்துகொள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/116&oldid=575927" இலிருந்து மீள்விக்கப்பட்டது