பக்கம்:தனி வீடு.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வண்டும் மலரும் - 107

வில்லையே' என்பது அவர் கூறுவது. அன்பில்ைதான் இறைவனுடைய திருவருளே வாங்கிக்கொள்ளலாம். -

  • அருள் என்னும் அன்பீன் குழவி' என உலக இயலே கினைந்து வள்ளுவர் சொல்கிருர், இறை வனுடைய அருளைப் பெறுவதற்கும் அது பொருந்தும். நம்மிடத்தில் அன்பு உண்டானல் இறைவன் நமக்கு அருளைப் பாலிப்பான். நம் அறிவு வெறும் அறிவாக கில்லாமல் அன்பு மயமாக மாறவேண்டும். அதனே எண்ணியே புத்தி இறைவனுடைய திருவடியைச் சார்ந்து அன்பு மயமாக வேண்டுமென்று இந்தப் பாட்டில் சொல் கிரு.ர். - . . ×

புத்தியை வாங்கிநின் பாதாம் புயத்தில் புகட்டி அன்பாய் முத்தியை வாங்க அறிகின்றிலேன். - வெறும் அறிவினலே இன்பத்தைப் பெற இயலாது. அதற்கு எல்லே உண்டு. இறைவனுடைய திருவடி ஒன்று தான் நமக்குப் புகல் இடம் என்று அறிவில்ை தெரிந்து, அதனைச் சார்ந்து பின்பு அங்கே ஒட்டிக்கொள்ள வேண்டும். சாரும் மட்டும் அறிவுக்கு வேலை உண்டு. ஒட்டிக்கொள்வதற்கு அன்பினால்தான் முடியும். . இப்போது நம்முடைய அறிவு உலகிலுள்ள பொருள் களே ஆராய்ந்து அவற்றைச் சிறந்தனவாகக் கருதுகின்றது; பின்பு அவற்ருேடு ஒட்டிக்கொள்கிறது. இது பற்றிய அறிவும் பற்றும் மேன்மேலும் பிறவியை எடுப்பதற்குக் காரணம் ஆகின்றன. அப்படியின்றி அந்த அறிவு வேறு எங்கெங்கோ போகும் போக்கை மாற்றி அதனை நம் முடைய கையில் வாங்கிக்கொண்டு இறைவனுடைய பாதாரவிந்தத்திலே செலுத்த வேண்டும்.

- வேலின் பெருமை 'கான் புத்தியை அது போகும் போக்கிலிருந்தும் இழுத்து வாங்குவதற்குரிய வழியைத் தெரிந்துகொள் ளாமல் திண்டாடுகிறேன். த.வருண காரியத்தைச் செய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/117&oldid=575928" இலிருந்து மீள்விக்கப்பட்டது