பக்கம்:தனி வீடு.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 1 0 தனி வீடு

வேண்டுமென்பது உனக்கே தெரியும் நீ என்ன செய் கிருயோ அதுவே எனக்கு இன்பம்' என்பது அவர்களது மனோபாவம். -

வேண்டத் தக்கது அறிவாய் 岛”

என்று மணிவாசகப் பெருமான் பேசுகின்ருர் கேளாமல் கொடுக்கின்ற பெரும் கொடையாளன் முருகன். அத் தகைய பெருமானிடம் நீ இது செய் என்று நான் சொல் வது மிகை. அவனுடைய திருவுள்ளம் ஏதோ?’ என்று அருணகிரிநாதர் எண்ணுகிருர்.

6:முருகா, நீ மலே தவிடு படும்படிக் குத்திய பெரிய வீரன். கங்கையின் மகன். அடியார்களே இன்னபடி ஆட்கொள்ளவேண்டும் என்று நீ திருவுள்ளத்தில் கொண் டிருப்பாய். அந்த வகையில் அடியேனுக்கும் ஒரு வழி வைத்திருப்பாய். உன் திருவுள்ளம் யாதென்று அறியேன். நீ என்ன எண்ணி இருக்கிருய்? நான் என்னுடைய முயற்சியில்ை நன்மை பெறவேண்டுமென்பது தெரியாமல் அலைகிறேன். என்னுடைய அறிவை அது போகிற போக்கில் விடாமல் மாற்றி, உன்னுடைய திருவடி மலரில் புகுத்தி அன்பு மயமாக்கி அதல்ை முத்தியைப் பெறு வதற்கு உரிய வழியை நான் தெரிந்துகொள்ளவில்லை. நான் செய்கிற பிழைக்குத் தண்டனையாக உன்னுடைய வேலே நீ பிரயோகம் பண்ணவேண்டுமென்று கேட்கத் தோன்றுகிறது. ஆல்ை அது முறை அன்று. பழைய சூரன் கடுங்கும்படியாக விட்ட வேல் அது. அத்தகைய வேலுக்குத் தக்க இலக்கு அன்று இது. அதனே வாங்க இது தகுதி ஆகுமா? உன் திருவுள்ளம் யாதோ அதன்படி நடக்கட்டும்' என்று அருணகிரிநாதர் இந்தப் பாட்டில் விண்ணப்பித்துக் கொள்கிரு.ர்.

率 + #

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/120&oldid=575931" இலிருந்து மீள்விக்கப்பட்டது