பக்கம்:தனி வீடு.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வண்டும் மலரும் - 11 1

புத்தியை வாங்கிகின் பாதாம்

புயத்தில் புகட்டி அன்பாய் முத்தியை வாங்க அறிகின்றி

லேன் முது சூர்நடுங்கச் சத்தியை வாங்கத் தரமோ? குவடு தவிடுபடக் குத்திய காங்கேய னே!வினை

யேற்கென் குறித்தனேயே?

(கிரெளஞ்சமலை தவிடு போலப் பொடியாகும்படி வேல்ால் துளைத்த காங்கேயனே! என் புத்தியை அது போகும் போக்கில் விடாமல் மாற்றி உன்னுன்ட்ய திருவடி களாகிய தாமரையிலே செலுத்தி அன்புமய்மாகி முத்தியை உன்னிடமிருந்து பெற நான் அறிந்தில்ேன்: பழைய சூரன் நடுங்குவதற்குக் காரணமான அந்த வேற்படையை நீ விடு வதற்கு என் புத்தி தகுதி உடையதோ? பாவம் உள்ளவு கிைய என்னைத் திருத்த நீ என்ன வழியைத் திருவுள்ளத் தில் கொண்டிருக்கிருய்? - -

வாங்குதல்.கைப்பற்றுதல்; போக்கை மாற்றி வளைத் தல். பாத்ாம்புயம் என்ற தல்ை புத்தியை வண்டாகக் கொள்ள வேண்டும். அன்பாய்.அன்பு மயமாகி. பழைய காலத்தில் இருந்தவனுதலின் முது சூர் என்ருர்,_நடுங்கு அச்சத்திய்ை என்று பிரித்துப் பொருள் கொள்ளவேண்டும் சக்தி.வேல். வாங்க.விட பிரயோகச் செய்ய. தாமோ. புத்தி தகுதியுடையதா? குவடு-மலை, இங்கே கிரெளஞ்ச கிரி. காங்கேயன்.கங்கையின் மகன்; முருகனைக் கங்கை தாங்கி வந்தமையின் இப்பெயர் உண்டாயிற்று; ஆயிர முகத்துநதி பாலனும்' என்பது திருவகுப்பு. வினே என்பது இரண்டு வினைகளையும் குறித்த்தர்யினும் இங்கே வினே யேன் என்றது. பாவி என்ற்படி, வினையேற்கு-பாவியாகிய எனக்கு: என்னேத் திருத்துவதற்கு என்பது பொருள், !

ஏன்-என்ன தந்திரத்தை. குறித்தன.திருவுள்ளத்தில் கொண்டாய்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/121&oldid=575932" இலிருந்து மீள்விக்கப்பட்டது