பக்கம்:தனி வீடு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனி வீடு 3

துண்டு. அது போலவே இந்த உடம்பை வளர்ப்பதற்கே, இந்த உடம்பாக கிற்கின்ற ஐந்து பூதங்கள் வளம்பெறு வதற்கே, நாம் அநேகமாக எல்லாச் செயல்களையும் செய் கிருேம். அந்தக் காரணத்தால் நாம் உண்ணுகிற உணவு, பேசுகின்ற பேச்சு ஆகிய எல்லாவற்றையுமே பூதங்கள் தம்முடையன ஆக்கிக் கொள்கின்றன என்று சொன்னல் தவறு இல்லே.

நிலையாத விடு

- இந்தப் பூத வீட்டிற்குள் புகுந்துகொண்டு, பூதங் களின் செயலுக்கு அகப்படாமல் நின்று போரிட்டு, இந்த வீட்டை விட்டு நல்ல இடம் போக வேண்டும் என்ற உறுதியோடு, அதற்கு வேண்டிய முயற்சிகளைச் செய்கிற மக்கள் சுதந்தரமான வீட்டைப் பெறுவார்கள். பெரும் பாலோருக்கு இந்த வீட்டில் பூதங்கள் இருக்கின்றன என் பதே தெரியாது. இயல்பாகவே நமக்கு அமைந்த வீடு இது என்று கினைத்துக்கொண்டிருக்கிருர்கள். அப்படி நினைத்தாலும் ஏதேனும் ஒரு சமயத்தில் இந்த வீட்டை விட்டுப் போகவேண்டியதுதான். இந்த வீடு நமக்குச் சொந்தம் என்ற கினேப்பு மக்களுக்கு இருந்தாலும் இது நமக்குச் சொந்தம் ஆகிவிடாது என்பது தெரியும். தினக் தோறும் மனிதர்கள் மரணம் அடைந்து கொண்டிருக் கிருர்கள். இறந்துபோனவனைப் பார்க்கும் போதும், நமக்குத் தெரிந்தவர் ஒருவர் இறந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்கும் போதும் இந்த வீடு நெடுங்காலம் நிலைத்து இராது என்ற கினைவு தோன்றுகிறது. ஆனல் அந்த நினைவு உடனே மறைந்துவிடுகிறது. இதைத்தான்

மயான வைராக்கியம் என்று சொல்வார்கள்.

இந்தப் பூத வீட்டில் இருப்பதால் துன்பமே அன்றி இன்பம் இல்லை. துன்பம் தருகின்ற வீட்டில் இருக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/13&oldid=575824" இலிருந்து மீள்விக்கப்பட்டது